சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து தற்போது ஓய்வு பெறும் எண்ணம் இல்லை என இந்திய அணியின் கேப்டன் தோனி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 20 ஓவர் உலகக்கோப்பையை வென்று, இன்னொரு வெற்றி ஸ்டெம்பை வீட்டிற்கு எடுத்துச் செல்வேன் என நம்பிக்கை தெரிவித்தார்.
ஓய்வுக்குப் பிறகு தன்னுடைய நாட்களை கழிக்க திட்டம் ஒன்று வைத்திருப்பதாகவும் தோனி கூறினார். வீட்டிற்கு எடுத்து வந்துள்ள ஸ்டெம்புகளை நினைவு கூறத் தொடங்கினாலே 10 ஆண்டுகள் கழிந்துவிடும் எனவும் தோனி தெரிவித்தார்.