அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக தமிழர் பதவி ஏற்றார்

360cb119-12bb-48ab-bdc4-338c1bfe9d25_S_secvpfஅமெரிக்க சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக இருந்த அன்டோனின் ஸ்கோலியா (வயது 79) என்பவர் சமீபத்தில் மரணம் அடைந்தார்.

அவர் வகித்த இடம் காலியானதால் அந்த இடத்துக்கு புதிய நீதிபதியாக யாரை தேர்வு செய்வது என்று ஆலோசனை நடத்தப்பட்டது.

அமெரிக்காவில் கீழ் கோர்ட்டுகளில் நீதிபதியாக இருப்பவர்தான் சுப்ரீம் கோர்ட்டுக்கு நீதிபதியாக தேர்வு செய்யப்படுவார். அந்த வகையில் பலரது பெயர் பரிசீலினை செய்யப்பட்டது.

கொலம்பியா மாகாணத்தில் ‘‘கோர்ட் ஆப் அப்பீல்’’ நீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த சீனிவாசன் பெயரும் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டது. சீனிவாசன் முற்போக்கு சிந்தனையும், புதிய பன்முகத்தன்மையும் கொண்டிருந்தால் அவரை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக நியமனம் செய்ய அமெரிக்க அதிபர் ஒபாமா முடிவு செய்தார்.

சீனிவாசனை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக நியமனம் செய்ய செனட் உறுப்பினர்களில் ஒரு சாரார் எதிர்ப்பு தெரிவித்தனர். அதை கண்டு கொள்ளாத அதிபர் ஒபாமா, தாமே சீனிவாசன் பெயரை முன் மொழிந்தார். இதையடுத்து சீனிவாசனை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக நியமனம் செய்ய செனட் சபை ஒப்புதல் அளித்தது.

இதைத்தொடர்ந்து சீனிவாசன் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக பதவி ஏற்கும் விழா நடந்தது. இந்த விழாவில் தாய் சரோஜா மற்றும் குழந்தைகளுடன் சீனிவாசன் பங்கேற்றார். அமெரிக்க சட்ட முறைப்படி அவர் பதவி ஏற்றார்.

அப்போது சீனிவாசன் தன் தாய் சரோஜா ஏந்தி நின்ற பகவத் கீதை புத்தகம் மீது கை வைத்தப்படி உறுதி மொழி ஏற்று கொண்டார். அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக தமிழர் ஒருவர் பதவி ஏற்பது இதுவே முதல் தடவையாகும்.

நெல்லை மாவட்டம் மேல திருவேங்கடபுரத்தை சேர்ந்த சீனிவாசன் மூலம் தமிழ்நாட்டுக்கு இந்த பெருமை கிடைத்துள்ளது. அமெரிக்காவில் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளுக்கு ஓய்வு பெற வயது வரம்பு எதுவும் கிடையாது.

தங்கள் வாழ்நாளின் கடைசி காலம் வரை அவர்கள் நீதிபதியாக பதவியில் இருக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.


கருத்துக்களை பகிர


அல்லது

One comment

  1. I thought I’d have to read a book for a diesrvcoy like this!

Your email address will not be published.

Scroll To Top