4,200 கோடி ரூபாய் வரி செலுத்துமாறு வோடஃபோன் நிறுவனத்திற்கு நோட்டீஸ்

vodafone-14 ஆயிரத்து 200 கோடி ரூபாய் வரி செலுத்துமாறு வோடஃபோன் நிறுவனத்துக்கு வருமான வரித் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

நீதிமன்றத்தால் தடை விதிக்கப்படாத வரி பாக்கிகளுக்கு, குறிப்பிட்ட இடைவெளியில் நோட்டீஸ் அனுப்புவது வழக்கமான நடைமுறை என மத்திய வருவாய்த் துறைச் செயலர் ஹஸ்முக் ஆதியா தெரிவித்தார்.

2007-ம் ஆண்டில் ஹட்சிசன் நிறுவனத்தை வாங்கியதில், 14 ஆயிரத்து 200 கோடி ரூபாய் மூலதன ஆதாய வரி செலுத்துமாறு வோடஃபோனுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

வெளிநாட்டில் நடந்த பரிவர்த்தனைக்கு இந்தியாவில் வரி செலுத்தத் தேவையில்லை என வோடஃபோன் தெரிவித்து வருகிறது. இந்த நிலையில், மீண்டும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top