மன்மோகன் சிங் பிரதமரானவுடன் பொருளாதார சீர்திருத்தங்கள் முடங்கின: அருண் ஜேட்லி

‘இந்தியாவில் தயாரிப்போம் வாரம்’ மும்பையில் சனிக்கிழமை தொடங்கியது. இதற்கு நடுவே நடந்த சிஎன்என் ஆசியா பிஸ்னஸ் அமைப்பின் கூட்டத்தில் பங்கேற்ற அருண் ஜேட்லி பேசியதாவது

eewநிதியமைச்சராக இருந்தபோது சிறப்பாக பணியாற்றிய மன்மோகன் சிங், பிரதமரான பிறகு பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் முடங்கிப் போய்விட்டன என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி குற்றம்சாட்டி உள்ளார்.

மன்மோகன் சிங் நிதியமைச்சராக பதவி வகித்தபோது, பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளை சிறப்பாக மேற்கொண்டார். ஆனால் அவர் பிரதமரான பிறகு அந்த நடவடிக்கைகள் முடங்கிவிட்டன.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது, காங்கிரஸ் தலைமையகத்தில் (சோனியா காந்தி) முக்கிய கொள்கை முடிவுகள் எடுக்கப்பட்டன. ஆனால் இப்போதைய தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் பிரதமர்தான் இறுதி முடிவு எடுக்கிறார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும் ஜேட்லி தனது முகநூல் பக்கத்தில், “ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின்போது, கொள்கை முடிவுகள் எடுப்பதில் காலதாமதம் ஏற்பட்டது. ஆனால் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில், அந்த நிலை மாறி சர்வதேச அளவில் இந்தியாவைப் பற்றிய மதிப்பீடு அதிகரித்துள்ளது. அதேநேரம், மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஜிஎஸ்டி மசோதா விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி அரசியல் செய்கிறது” என்று பதிவிட்டுள்ளார்.

“பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு மீதான நம்பகத்தன்மை குறைந்துவிட்டது. எனவே, ஒவ்வொரு இந்தியரிடத்திலும் நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும்” என்று மன்மோகன் சிங் கூறியிருந்த நிலையில் அருண் ஜேட்லி இவ்வாறு கூறியிருப்பது குற்பிபடத்தக்கது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top