ஆந்திராவை பிரித்த காங்கிரசை ஒழிக்க வேண்டும் : ‘ஜனசேனை’ தலைவர் பவன் கல்யாண்

பவன் கல்யாண்ஆந்திர மாநிலத்தை 2 ஆக பிரித்த காங்கிரஸ் கட்சியை ஒழிக்க வேண்டும் என்று பவன் கல்யாண் தெரிவித்துள்ளார்.

நடிகர் சிரஞ்சீவியின் தம்பியும், நடிகருமான பவன் கல்யாண் கடந்த மாதம் ‘ஜனசேனை’ என்ற புதிய கட்சியை தொடங்கினார். இதையொட்டி ஜனசேனை கட்சியின் பிரமாண்ட பொதுக் கூட்டம் விசாகபட்டினத்தில் நடந்தது.அந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பவன் கல்யாண் பேசும்போது, ”வருகிற நாடாளுமன்ற தேர்தலில் எங்கள் கட்சி போட்டியிடவில்லை. தூய்மையான, சிறந்த இளைஞர்கள் எங்கள் கட்சியில் சேர்ந்த பிறகு தேர்தலில் போட்டியிடுவோம்.

அடுத்த 5 ஆண்டுகள் ஆந்திராவில் ஆட்சி எப்படி நடக்கிறது என்பதை கண்காணிப்பேன். ஏதாவது தவறு நடந்தால் தட்டிக் கேட்பேன். சீமாந்திரா பகுதிக்கு நல்ல தலை நகரை யார் உருவாக்குவார்கள் என்று நினைக்கிறீர்களோ அவர்களுக்கு ஓட்டு போடுங்கள். காங்கிரஸ் கட்சி 150 ஆண்டு பாரம்பரியமிக்கது என்று கூறுகிறார்கள். நேரு, காந்தி வழியில் வந்த சோனியா காந்தி ஆந்திராவை 2 ஆக பிரித்து ஒன்றாக இருந்த மக்களை இரண்டாக்கி விட்டார். காந்தி, நேரு உயிரோடு இருந்திருந்தால் பிரிவினை ஏற்பட்டு இருக்காது. ஆனால் சோனியா மக்களை பிரித்து விட்டார். இதனால் காங்கிரஸ் கட்சியை ஒழிக்க வேண்டும்.

எனக்கு மதம், கடவுள் மீது நம்பிக்கை உண்டு. ஆனால் மதவாத அரசியல் செய்ய மாட்டேன். ஒரு கன்னத்தில் அடித்தால் 2 கன்னத்திலும் திருப்பி அடிப்பதுதான் எங்கள் கொள்கை. நான் சிரஞ்சீவிக்கு எதிராக கட்சி தொடங்கவில்லை. சிரஞ்சீவி மீது நான் அளவு கடந்த அன்பு வைத்திருக்கிறேன். ஆனால் இப்போது உள்ள சூழ்நிலையில் அவருக்கு எதிராக அரசியல் செய்ய வேண்டியதாகிவிட்டது” என்று அவர் பேசினார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top