பாளையங்கோட்டையில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர்நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளை கண்டித்து போராட்டம்

பாளையங்கோட்டையில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளை கண்டித்து எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் நேற்று பாளையங்கோட்டை பஸ் நிலையம் அருகில் உள்ள நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்துக்கு வந்தார்கள். அவர்கள் திடீரென்று நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் முன்பு தரையில் படுத்து உறங்கும் போராட்டம் நடத்தினார்கள்.

Playankottai-Estipiai-Party-Leading-edge-Battles_SECVPFமாவட்ட செயலாளர் ஹயாத் முகமது தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் இலியாஸ், பாளையங்கோட்டை தொகுதி தலைவர் ஷேக் தாவூத், செயலாளர் மின்னத்துலா, துணைத்தலைவர் ஜாபர், மேலப்பாளையம் பகுதி தலைவர் பசீர், செயலாளர் மீரான், துணைத்தலைவர் கல்வத் மற்றும் பலர் கலந்து கொண்டார்கள்.

அதிகாரிகள் நெடுந்தூக்கம்

இதுகுறித்து மாவட்ட செயலாளர் ஹயாத் முகமது கூறுகையில், ‘‘மேலப்பாளையம் -அம்பை மெயின் ரோட்டில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. ஆயிரக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் இந்த ரோடு மோசமான நிலையில் உள்ளது. இதை சீரமைக்க கோரி பல்வேறு போராட்டங்கள் நடத்தி விட்டோம். இந்த ரோட்டை உடனடியாக சீரமைத்து தருவோம் என்று அதிகாரிகள் வாக்கு கொடுத்திருந்தார்கள். ஆனால் வாக்குறுதியை மறந்து நெடுந்தூக்கத்தில் இருக்கும் நெடுஞ்சாலைத்துறையின் அவலநிலையை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடத்தினோம்’’ என்றார்.

இதுபற்றி தகவல் அறிந்த பெருமாள்புரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தார்கள். போராட்டம் நடத்திய 31 பேரை போலீசார் கைது செய்து, பின்னர் விடுதலை செய்தார்கள்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top