வார்னே புகாருக்கு கூலாக பதிலடி கொடுத்த ஸ்டீவ் வாக்

ஆஸ்திரேலிய அணியின் சுழற்பந்து ஜாம்பவனாக விளங்கியவர் ஷேன் வார்னே. இவர் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வாக் பெரிய சுயநலவாதி என்று கூறியிருந்தார். அத்துடன் துணை கேப்டனாக இருந்த தன்னை 1999-ம் ஆண்டு நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கெதிரான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் கடைசி டெஸ்டில் இருந்து நீக்கியது தனக்கு பெரிய ஏமாற்றம் அளித்ததாகவும், இதேபோல் பல்வேறு காரணங்களை கூறலாம் என்றும் குற்றம் சாட்டியிருந்தார்.

இதற்கு தற்போது ஸ்டீவ் வாக் பதில் அளித்துள்ளார். வார்னே குற்றச்சாட்டு குறித்து ஸ்டீவ் வாக் பதில் அளிக்கையில் ‘‘என்னுடைய பதிலால் வார்னேயின் குற்றச்சாட்டுக்கு நியாயப்படுத்த விரும்பவில்லை.

வார்னே மட்டுமல்ல பல வீரர்களை நீக்குவதற்கு எனக்கு கடுமையானதாக இருந்தது என்பதை நான் சொல்வதுதான் நியாயமாக இருக்கும். அணியில் இருந்து ஆடம் டேல் அல்லது கிரேக் பிளெவெட் ஆகியோரை நீக்கியது எளிதானதாக சொல்ல முடியாது. ஏராளமான வீரர்களை இதுபோன்று சொல்ல முடியும்.

ஒரு கேப்டனாக இருந்து கொண்டு இதைச் செய்வது கடினமான விஷயம். ஆனால், கேப்டனாக இதை செய்ய வேண்டும். ஏனெனில் அணியின் நலனுக்காக கடினமான முடிவுகளை எடுக்க வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். இதுபோன்று வீரர்களை தைரியமான நீக்கும்போது, அவர்கள் கேப்டனை விரும்பமாட்டார்கள். அதற்கேற்ப தம்மை தயார்படுத்திக்கொள்ள வேண்டும்’’ என்றார்.

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top