நேபாள நாட்டின் பிரதமர் கே.பி.ஷர்மா ஒலி அரசுமுறை பயணமாக வரும் 19-ம் தேதி இந்தியா வருகிறார்.

நேபாள நாட்டின் பிரதமர் கே.பி.ஷர்மா ஒலி அரசுமுறை பயணமாக வரும் 19-ம் தேதி இந்தியா வருகிறார்.

fdfdfdfdfdffdffகடந்த ஆகஸ்ட் மாதம் நேபாளத்தில் நிறைவேற்றப்பட்ட திருத்தப்பட்ட அரசியல் சாசன சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இங்குள்ள மாதேசி இன இந்தியர்கள் பெரும் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் சற்று பின்னடைவை சந்தித்த இந்தியா-நேபாளம் இடையிலான நல்லுறவை சீரமைக்கும் வகையில் ஷர்மா ஒலியின் இந்தியப் பயணம் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நேபாளத்தின் பிரதமராக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பதவியேற்றுகொண்ட ஷர்மா ஒலி முதன்முறையாக வரும் 19-ம் தேதி இந்தியா வருகிறார். அவருடன் மந்திரிகள், அரசு உயரதிகாரிகள் அடங்கிய உயர்மட்ட குழுவினர் உடன் வருகின்றனர்.

வரும் 20-ம் தேதி டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கும் ஷர்மா ஒலி, இருநாடுகளுக்கிடையிலான பல்வேறுதரப்பு உறவுகளை மேம்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்துகிறார். அப்போது இந்தியா-நேபாளம் இடையே புதிய ஒப்பந்தங்களும் கையெழுத்தாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top