எம்.பி.க்கள் சம்பளம் இரண்டு மடங்காகிறது: பாராளுமன்ற குழு பரிந்துரை

சம்பள உயர்வு கேட்டு நாள்தோறும் போராடிக்கொண்டிருக்கும் அரசு உழியர்கள்,கூலி உயர்வு கேட்டு நாள்தோறும் போராடிக்கொண்டிருக்கும் நெசவு தொழிலாளர்கள் என நம் நாட்டில் தினசரி ஒரு போராட்டம் நடந்துக்கொண்டிருக்கிற சூழலில் எம்.பி.க் களுக்கு ஊதியம் மற்றும் படியை இரண்டு மடங்காக உயர்ந்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது

 

பாராளுமன்ற மற்றும் மேல்–சபை எம்.பி.க்கள் தற்போது ரூ.50 ஆயிரம் ஊதியம், ரூ.45 ஆயிரம் தொகுதிப்படி, ரூ.45 ஆயிரம் அலுவலகப்படி என மொத்தம் மாதந்தோறும் ரூ.1.40 லட்சம் சம்பளமாக பெறுகின்றனர்

அதன்படி ரூ.1 லட்சம் ஊதியம், தொகுதிப்படி ரூ.90 ஆயிரம், அலுவலகப்படி ரூ.90 ஆயிரம் என மாதம் ரூ.2.8 லட்சம் சம்பளம் வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக பாரதீய ஜனதா எம்.பி. யோகி ஆதியநாத் தலைமையில் பாராளுமன்ற கூட்டுக்குழு ஆய்வு செய்தது. இந்த குழு தனது பரிந்துரைகளை மத்திய அரசிடம் சமர்ப்பித்துள்ளது. அதில் எம்.பி.க்கள் சம்பளத்தை இரண்டு மடங்காக உயர்த்தும் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்று பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top