முருகதாசன் நினைவு தினம்: ஐ.நா அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்!

முருகதாசன் நினைவு தினமான இன்று, சர்வதேச விதிகளையும், ஐநாவின் பொறுப்புகளையும் திட்டமிட்டு தட்டிக்கழித்துவிட்டு ஈழ இனப்படுகொலை நடப்பதற்கு உதவி செய்ததை நினைவுபடுத்தும் விதமாக ஐ.நா அலுவலகத்தை முற்றுகையிட்டு இன்று போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தினை மே 17 இயக்கம் ஒருங்கிணைத்தது.

12669541_1250710554946401_821747671874973206_n

தமிழீழ விடுதலைக்காக ஐ.நா அலுவலகம் முன்பு இதே நாளில் தீக்குளித்து உயிர்விட்டவர் முருகதாஸ். அவரது நினைவு தினமான பிப்ரவரி 12-ல் வருடம் தோறும், இப்போராட்டம் மே17 இயக்கத்தினால் ஒருங்கிணைக்கப்படுகிறது.

12670156_1250710568279733_2663467329925224530_n

 

12670477_1250723898278400_7513189754344555012_n

இன்று நடைபெற்ற போராட்டத்தில், மதிமுக, தந்தைப்பெரியார் திராவிடர் கழகம், தமிழர் விடியல் கட்சி, மனித நேய மக்கள் கட்சி , எஸ்.டி.பி.ஐ, விடுதலைத் தமிழ்ப்புலிகள், தமிழர் விடுதலைக்கழகம், திராவிடர் விடுதலைக் கழகம், தமிழ்த்தேசிய குடியரசு இயக்கம், புரட்சிகர இளைஞர் முன்னனி, தமிழக மக்கள் புரட்சிக்கழகம், மே17 இயக்கம் ஆகிய அமைப்புகள் பங்கேற்றன.

12741901_1250710784946378_5034278968977735850_n

 

போராட்டத்தின் போது ஐ.நா மனித உரிமை ஆணையர் அல்-ஹுசைனின் அறிக்கையை கண்டித்தும், ஐ.நாவின் தீர்மானத்தின் மூலமாக நடத்தப்படும் இலங்கை ஆதரவு அரசியலை அம்பலப்படுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

12715644_1250710878279702_4708058438826918483_n

 

12715772_1250710884946368_3868527921585285229_n

மேலும், அல்-ஹுசைன், விஜய் நம்பியார், பான் கீ மூன், ஜான் ஹோம்ஸ் ஆகியோரின் உருவப்படங்களை எரித்தும், செருப்பால் அடித்தும் தங்களது எதிர்ப்பினை பதிவு செய்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட 200-க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்து இந்திரா நகரில் உள்ள சமூக நலக்கூடத்தில் வைத்துள்ளனர்.

 

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top