தெற்காசிய விளையாட்டுப் போட்டி:தங்கங்களை குவித்து வரும் இந்திய வீரர்கள்

south_asian_games_logo__largeதெற்காசிய விளையாட்டில் தமிழகத்தை சேர்ந்த சூர்யா, சுரேந்தர், ரஞ்சித் மகேஷ்வரி, தருண் ஆகியோர் தடகளத்தில் தங்கப்பதக்கங்கள் வென்றனர்.

மகளிர் 10 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் தமிழகத்தை சேர்ந்த சூர்யா முதலிடம் பிடித்தார். பந்தய இலக்கை 32 நிமிடங்கள் 29 நொடிகளில் கடந்து தெற்காசிய விளையாட்டில் அவர் புதிய சாதனையும்‌ படைத்தார். சுவாதி கதாவே வெள்ளிப்பதக்கம் வென்றார்.

மகளிர் ஆயிரத்து 500 மீட்டர் ஓட்டத்தில், இலங்கை வீராங்கனை அபயரத்னாவின் சவாலை முறியடித்து இந்திய வீராங்கனை சித்ரா தங்கம் வென்றார்.

மகளிர் ஈட்டி எறிதலில் இந்தியாவின் சுமன் தேவி தங்கப்பதக்கமும், அன்னுராணி வெள்ளிப்பதக்கமும் வென்றனர். ஆடவர் மும்முறை தாண்டுதலில் ரஞ்சித் மகேஷ்வரி தங்கப்பதக்கத்தையும், சுரேந்தர் வெள்ளிப்பதக்கத்தையும் வென்றனர்.

ஆடவர் ஆயிரத்து 500 மீட்டர் ஓட்டத்தில் அஜய் குமார் சரோஜ் முதலிடம் பிடித்தார்.ஆடவர் 400 மீட்டர் தடைதாண்டும் ஓட்டத்தில் தருண் தங்கப்பதக்கம் வென்றார். தடகளத்தில் நேற்று மொத்தமுள்ள 12 பதக்கங்களில் 11 பதக்கங்களை இந்தியா வென்றது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top