மோடி தன்னுடைய பாஸ்போர்ட்டில் திருமணம் குறித்து என்ன சொல்லியிருக்கிறார் மனைவி யசோதா ஆர்.டி.ஐ மனு

நரேந்திர மோடி பாஸ்போர்ட் பெறுவதற்காக தாக்கல் செய்த ஆவணங்களில் திருமணம் தொடர்பாக என்ன தகவல் அளித்துள்ளார் என்பதை தெரிந்து கொள்ள அவரது மனைவு யசோதா பென் தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மனு தாக்கல் செய்துள்ளார்.

இது குறித்து மண்டல பாஸ்போர்ட் அதிகாரி கான் கூறும்போது, “பிரதமர் மோடியின் மனைவி யசோதா பென் இன்று (வியாழக்கிழமை) மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார்.

மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது பாஸ்போர்ட்டுக்கான விண்ணப்பத்தில் தனது திருமணம் தொடர்பாக என்ன தகவலை பதிந்திருக்கிறார் என்ற தகவலை யசோதா பென் கோரியிருக்கிறார். அவரது மனுவை பரிசீலித்து உரிய தகவலை நாங்கள் வழங்குவோம்” என்றார்.

கடந்த நவம்பர் மாதம் யசோதா பென் பாஸ்போர்ட் கோரி விண்ணப்பித்தார். ஆனால் அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. யசோதா திருமண சான்றிதழோ அல்லது மோடியை திருமணம் செய்து கொண்டதை உறுதிப்படுத்தும் சாட்சிய ஆவணமோ அளிக்காததால் மனுவை நிராகரிப்பதாக பாஸ்போர்ட் அலுவலகம் தெரிவித்திருந்தது. இதனையடுத்தே யசோதா பென் ஆர்.டி.ஐ. மனு தாக்கல் செய்துள்ளார் என யசோதாவின் சகோதரர் அசோக் தெரிவித்துள்ளார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top