நாளை 2-வது 20 ஓவர் போட்டி: இலங்கை அணிக்கு இந்தியா பதிலடி கொடுக்குமா?

737410fe-2d75-4e35-a475-1d8d3d2e51c8_S_secvpfஇலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

இரு அணிகள் இடையேயான மூன்று 20 ஓவர் போட்டித் தொடரில் புனேயில் நடந்த முதல் ஆட்டத்தில் இந்திய அணி அதிர்ச்சிகரமாக தோற்றது.

இந்தியா–இலங்கை அணிகள் மோதும் இரண்டாவது 20 ஓவர் போட்டி ராஞ்சியில் நாளை நடக்கிறது. முதல் போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு இந்திய அணி பதிலடி கொடுக்குமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் நாளைய ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டிய நெருக்கடியும் உள்ளது. தோற்றால் தொடரை இழந்துவிடும். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஒயிட்வாஷ் செய்த இந்திய அணி சொந்த மண்ணில் தோல்வி அடைந்தது எதிர்பாராத ஒன்றாகும்.

சொந்த மண்ணில் தென்ஆப்பிரிக்காவிடம் 20 ஓவர் தொடரை இழந்து இருந்தது. அந்த நிலைமை ஏற்படாமல் இருக்க நாளை கண்டிப்பாக இலங்கையை வீழ்த்த வேண்டும்.

டோனி தனது சொந்த ஊரில் விளையாடுவதால் வெற்றியை பெற்று தருவார் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. புனே ஆட்டத்தில் இந்தியாவின் பேட்டிங் மிகவும் மோசமாக இருந்தது. இதை சரி செய்வது அவசியமாகும்.

இலங்கை புதுமுக வீரர்கள் ககன் ரஜிதா, தகன் ஷன்கா, செனனாயகே மற்றும் சமீரா ஆகியோரது பந்துவீச்சு இந்திய பேட்ஸ்மேன்களுக்கு சவாலாக இருந்தது.

இலங்கை அணி முதல் ஆட்டத்தில் பெற்ற வெற்றியால் மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளது. அந்த அணி மீண்டும் வீழ்த்தி தொடரை வெல்லும் ஆர்வத்துடன் உள்ளது.

காயம் காரணமாக முதல் ஆட்டத்தில் விளையாடாத தில்சான் ஆடுவது அந்த அணிக்கு கூடுதல் பலமாகும். இரு அணிகள் மோதுவது 8–வது 20 ஓவர் ஆட்டமாகும். இதுவரை நடந்த 7 போட்டியில் இந்தியா 3–ல் இலங்கை 4–ல் வெற்றி பெற்றன.

இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டம் ஸ்டார் ஸ்போர்ட்ஸ், தூர்தர்சனில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

இரு அணி வீரர்கள் விவரம்:–

இந்தியா: டோனி (கேப்டன்), தவான், ரோகித் சர்மா, ரகானே, ரெய்னா, யுவராஜ் சிங், ஹர்த்திக் பாண்டியா, ரவிந்திர ஜடேஜா, அஸ்வின், ஆசிஷ் நெக்ரா, பும்ரா, மனிஷ் பாண்டே, பவான் நெகி, ஹர்பஜன் சிங், புவனேஸ்வர் குமார்.

இலங்கை: சண்டிமால் (கேப்டன்), தில்சான், குணதில்கா, கபுகேந்திரா, ஸ்ரீவர்த்தனா, தகன் ஷன்கா, பிரசன்னா, பெரைரா, செனனாயகே, சுகன் ரஜிதா, சமீரா, நிரோஷசன், டிக்வெலா, தில்கரா பெர்னாண்டோ, குணரத்னே, பினுரா பெர்னாண்டோ, ஜெப்ரிவான் டர்சே.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top