அ.தி.மு.க. கூட்டணியில் சமத்துவ மக்கள் கட்சி தொடர்ந்து நீடிக்கிறது: சரத்குமார்

8c7c6178-3662-45bc-b442-0e3454338b16_S_secvpfதிருவண்ணாமலையில் சமத்துவ மக்கள் கட்சி பிரமுகர் ஒருவரின் கடை திறப்பு விழா இன்று நடந்தது. இதில் கலந்து கொள்ள கட்சியின் தலைவர் நடிகர் சரத்குமார் இன்று திருவண்ணாமலைக்கு வந்தார்.

முன்னதாக அவர் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். நவகிரக சன்னதியில் விளக்கேற்றி வழிபட்டார். கோவில் நிர்வாகம் சார்பில் அவருக்கு சிறப்பு மரியாதை வழங்கப்பட்டது.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–

சமத்துவ மக்கள் கட்சியின் சிறப்பு பொதுக்குழுவை கூட்டி தேர்தல் கூட்டணி தொடர்பாக முடிவு எடுக்கப்படும். அ.தி.மு.க. கூட்டணியில் தொடர்ந்து சமத்துவ மக்கள் கட்சி நீடிக்கிறது.

டாஸ்மாக் கடைகளை மாலை 6 மணிக்கு மேல் இரவு 10 மணி வரை திறந்து வைக்க வேண்டும்.

எர்ணாவூர் நாராயணன் கட்சியில் இருந்து சென்ற பிறகுதான் சமத்துவ மக்கள் கட்சி புத்துணர்வு பெற்றுள்ளது. 234 தொகுதிகளிலும் போட்டியிடுவது தொடர்பாக கட்சியினரிடம் விரைவில் விருப்ப மனு வாங்கப்படும் என்று கூறினார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top