போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு இலங்கை அரசு உதவ தவறிவிட்டது: ஐ.நா மனித உரிமை ஆணையர்

02-09-ohchr-zeid__large

இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ அரசு தவறிவிட்டதாக, ஐ.நா மனித உரிமை ஆணையர் செயிட் ஆல் ஹூசைன் குற்றம்சாட்டியுள்ளார்.

இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் சூழலில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், வடக்கு மற்றும் கிழக்கில் காணப்படும் நிலங்களை விடுவிக்க ராணுவம் துரிதப்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். போரில் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தவர்களுக்கு உதவ அரசாங்கம் தவறிவிட்டதாக அல் ஹூசைன் குற்றம்சாட்டியுள்ளார்.

நாட்டில் பாதுகாப்பை கருத்தில் கொண்டு சிறைபிடிக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுவிக்க இலங்கை அரசாங்கம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், செயிட் அல் ஹூசைன் கேட்டுக் கொண்டுள்ளார். நல்லிணக்கம் மற்றும் நிலையான வளர்ச்சி தொடர்பாக அரசிடம் அளிக்கப்பட்டுள்ள பொறுப்புகளை உரிய முறையில் நிறைவேற்ற வேண்டும் என்றும், ஐ.நா மனித உரிமை ஆணையர் வலியுறுத்தியுள்ளார்.

போருக்குப் பிறகு ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருந்தாலும், வடக்கு, கிழக்கு பகுதிகளில் மக்களிடம் இன்றளவும் அச்சம் நீடிப்பதாகவும் அல் ஹூசைன் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகளின் இலங்கை தொடர்பான விசாரணை இலங்கைக்கு எந்த வகையிலும் அச்சுறுத்தலாக அமையாது என்றும் மனித உரிமை ஆணையர் கூறியிருக்கிறார். கொழும்பு நகரை பார்க்கும் போது வளர்ச்சியின் அடையாளம் தெரிவதாகவும், வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வறுமையும், சிதைவுக்குப் பின்னர் எஞ்சிய சுவடுகள் மட்டுமே தெரிவதாகவும் செயிட் அல் ஹூசைன் தெரிவித்துள்ளார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top