தெற்காசிய விளையாட்டு போட்டி: இதுவரை 124 பதக்கங்களுடன் இந்தியா முதலிடம்

south_asain_fb__large

தெற்காசிய விளையாட்டுப் போட்டிக்கான தடகளத்தில் இந்திய அணி ஒரே நாளில் 5 தங்கப்பதக்கங்களை வென்றது. தமிழகத்தைச் சேர்ந்த சூர்யா 5 ஆயிரம் மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கம் வென்றார்.

ஆடவர் பிரிவில் நடந்த 5 ஆயிரம் மீட்டர் பந்தயத்தில் இந்திய வீரர் மன்சிங் தங்கப்பதக்கம் வென்றார். அவர் பந்தய இலக்கை 14 நிமிடம் பூஜ்யம் இரண்டு வினாடிகளில் கடந்து முதலிடம் பிடித்தார். மற்றொரு இந்திய வீரரான சுரேஷ் குமார் வெள்ளிப் பதக்கமும் வென்றனர்.நேபாள் வீரர் ரிமால் வெண்கலம் வென்றார்.

மகளிருக்கான குண்டு எறிதல் போட்டியில் இந்திய வீராங்கனை மன்பிரீத் கவுர் தங்கம் வென்றார். இதேபோல் ஆடவருக்கான சங்கிலி குண்டு எறிதல் போட்டியில் இந்தியாவின் நீரஜ் குமார் முதலிடம் பிடித்தார். அவர் 66 புள்ளி 14 மீட்டர் தூரம் குண்டு எறிந்து தங்கம் வென்றார்.

ஆடவர் மற்றும் மகளிர் பிரிவுக்கான 100 மீட்டர் ஓட்டபந்தயங்களில் இலங்கை அணி தங்கம் வென்றது. இதுவரை 78 தங்கம்‌, 36 வெள்ளி 10 வெண்கலம் என மொத்தம் 124 பதக்கங்களுடன் இந்தியா முதலிடத்தில் உள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top