பல்கலைக்கழகங்ளில் துணைவேந்தர்கள் நியமனம்: யுஜிசி இணைச்செயலாளர் விளக்கம் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

Captureதமிழக பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர்கள் நியமனம் குறித்து யு.ஜி.சி இணைச் செயலாளர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க, சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக ‘மாற்றம் இந்தியா’ அமைப்பின் பாடம் நாரயணன் மற்றும் அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ஆனந்தகிருஷ்ணன் தொடர்ந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம் தொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும், பல்கலைக்கழக மானியக்குழு விதிமுறைகளின்படி, துணைவேந்தர் நியமனங்கள் இரு‌்க வேண்டும் என மனுதார‌ர்கள் தரப்பில் கோரப்பட்டிருந்தது.

தலைமை ‌நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி புஷ்பா சத்ய நாராயணா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு வழக்கு விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் விசாரணையை வரும் 22ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர். அன்றைய தினம் யு.ஜி.சி இணைச் செயலர் உரிய ஆவணங்களுடன் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top