3 கல்லூரி மாணவிகள் மரணம்: மறு பிரேத பரிசோதனைக் கோரிய மனு தள்ளுபடி!

உயர்நீதிமன்ற எஸ்விஎஸ் கல்லூரி மாணவிகள் 3 பேர் மரணத்தில், சரண்யாவின் உடலை மறுபிரேத பரிசோதனை செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யயப்பட்டது.

பங்காரம் எஸ்விஎஸ் தனியார் இயற்கை மருத்துவக் கல்லூரி மாணவிகள் 3 பேர் மர்மமான முறையில் உயிரிழந்தனர். அவர்களது உடல்கள் கிணற்றில் இருந்து மீட்கப்பட்டன.

இந்த நிலையில், மறு பிரேத பரிசோதனை செய்யக் கோரி மாணவி சரண்யாவின் தந்தை ஏழுமலை மனு தாக்கல் செய்திருந்தார். மனுவில் மோனிஷாவின் உடலைப் போல மாணவி சரண்யாவின் உடலையும் மறுபிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி மாலா தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

உத்தரவில் சரண்யாவின் உடலை புதைத்து 12 நாட்கள் ஆகிவிட்டதால் உடல் மிக மோசமான நிலையில் இருக்கும் என்று நீதிபதி மாலா குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக மாணவிகள் மூவரும் கிணற்றில் விழுந்து உயிரிழக்கவில்லை என்று பிரேத பரிசோதனை அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாக சிபிசிஐடி நேற்று சென்னை உயர்நீதிமன்றத்தில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top