இந்தியா- இலங்கை அணிகள் இடையே இன்று முதல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி!

இந்தியா-இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல்‌ டி-20 கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறுகிறது. புனேவில் நடைபெறும் இந்தப்போட்டி இரவு 7 மணிக்குத் தொடங்குகிறது. ஆஸ்திரேலிய அணியுடனான 20-20 தொடரை வென்ற தெம்புடன் இந்திய அணி, இலங்கையை எதிர்கொள்கிறது.

இந்தியா- இலங்கை

தோனி தலைமையிலான அணியில் ரோகித் ஷர்மா, ஷீகர் தவான், சுரேஷ் ரெய்னா, யுவராஜ் சிங், அஷ்வின், நெஹ்ரா, ஜடேஜா என அனுபவம் வாய்ந்த வீரர்கள் உள்ளனர். இளம் வீரர்களான ரஹானே, பம்ரா, பாண்டயா ஆகியோரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

சண்டிமால் தலைமையில் களமிறங்கும் இலங்கை அணியின் இளம் வீரர்கள் அதிகளவில் உள்ளனர். நிரோஷன் திக்வில்லா, அசேலா குணரத்னே ஆகியோர் அறிமுக வீரர்களாக களமிறங்கவுள்ளனர்.

வேகப்பந்து வீச்சாளரான பினுரா பெர்ணாண்டோ தசைப்பிடிப்பு காரணமாக தொடரில் இருந்து விலகியுள்ளார். அவருக்கு பதிலாக சமிந்தா எரங்கா இலங்கை அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top