தெற்காசிய விளையாட்டுப் போட்டி: 28 தங்கப்பதக்கங்கள் வென்று இந்திய அணி முதலிடம்

south_fb__large

தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய அணி இதுவரை 28 தங்கப்பதக்கங்களை வென்று முதலிடத்தில் இருந்து ‌வருகிறது.

நீச்சல் பிரிவில்‌ ஆயிரத்து 500 மீட்டர் ப்ரீ ஸ்டைல்போட்டியில் இந்தியாவின் சஜன் பிரகாஷ் தங்கப்பதக்கமும், சவ்ரப் சங்வேகர் வெள்ளிப்பதக்கமும் வென்றனர். 200 மீட்டர் பேக் ஸ்ட்ரோக் பிரிவில் அரவிந்த் தங்கப்பதக்கம் வென்றார். 100 மீட்டர் ப்ரஸ்ட் ஸ்ட்ரோக் பிரிவில் இந்தியாவின் சந்தீப் செஜ்வால் முதலிடம் பிடித்தார்.

இந்தியாவை சேர்ந்த மற்றொரு வீரர் புனித் ரானா வெள்ளிப்பதக்கம் வென்றார். நீச்சல் பிரிவில் இந்தியா இன்று நான்கு தங்கம், ஐந்து வெள்ளி, மற்றும் ஒரு வெண்கலப்பதக்கத்தை வென்றது.

பளுதூக்குதலில் மகளிர் 58 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை சரஸ்வதி ரவுத் தங்கப்பதக்கம் வென்றார். ஆடவர் 69 கிலோ எடைப்பிரிவு பளுதூக்குதலில் இந்திய வீரர் சம்போ லபுங் தங்கம் வென்றார். இரண்டாவது நாளில் மட்டும் இந்திய அணி 14 தங்கப்பதக்கங்களை வென்றுள்ளது. மொத்தம் 28 தங்கம், 12 வெள்ளி, 3 வெண்கலப்பதக்கங்களுடன் இந்திய அணி முதலிடத்தில் உள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top