தமிழக மீனவர்கள் மீதான கைது நடவடிக்கை தொடரும்: இலங்கை அமைச்சர் மகிந்த அமரவீர

மகிந்த அமரவீராஇலங்கை கடற்பரப்பிற்கு அத்துமீறி வரும் இந்திய மீனவர்களைக் கைது செய்யும் நடவடிக்கை தொடரும் என்றும், பறிமுதல் செய்யப்படும் அவர்களின் வலைகள், படகுகள் எவையும் திருப்பியளிக்கப்படாது எனவும், இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இந்திய மீனவர்கள் வட பகுதி கடலில் அத்துமீறி மீன்பிடிப்பதால் வட பகுதி மீனவர்கள் பெருமளவு இழப்புகளைச் சந்தித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கடல்வாழ் செட்டை மீன் குஞ்சுகள் இனப்பெருக்க நிலையத்திற்கான அடிக்கல் நாட்டு விழா மட்டக்களப்பு கிரான்குளத்தில் நடைபெற்றது

அதில் பேசியபோது இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கைக்கு தீர்வு காணும் வகையில் இந்திய அரசின் பிரதிநிதிகளை கொழும்பில் சந்தித்துள்ளதாகக் குறிப்பிட்ட அமைச்சர், அப்போது வட பகுதி மீனவர்களின் பிரச்சினைகள் குறித்து எடுத்துரைத்தாக அமைச்சர் தெரிவித்தார்.

எனவே மிக விரைவில் இந்திய அரசுடன் இணைந்து இலங்கை – இந்திய மீனவர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவுள்ளதாகவும் அமைச்சர் மகிந்த அமரவீர நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top