ஆந்திராவில் உண்ணாவிரதம் இருக்கும் காபு போராட்ட குழு தலைவர் சிகிக்சைக்கு மறுப்பு

pppppppppஆந்திராவில் காபு சமூகத்தை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க கோரி அந்த சமூகத்தின் தலைவரும், முன்னாள் தெலுங்குதேசம் கட்சியின் மந்திரியுமான முத்தரகடா பத்மநாபம் தலைமையில் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் மறியல் போராட்டம் நடந்தது.

லட்சக்கணக்கானோர் பங்கேற்ற இந்த போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் ஒரு எக்ஸ்பிரஸ் ரெயில் தீ வைத்து எரிக்கப்பட்டது. மேலும் 25 வாகனங்களும் கொளுத்தப்பட்டது.

 

இது தொடர்பாக பத்மநாபம் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

இந்த நிலையில் தனது கோரிக்கையை வலியுறுத்தி பத்மநாபம் கிரிலாம்புடி கிராமத்தில் உள்ள தனது வீட்டில் கடந்த வெள்ளிக் கிழமை சாகும் வரை உண்ணாவிரதம் தொடங்கினார். அவருடன் அவரது மனைவி பத்மாவதியும் உண்ணாவிரதம் இருந்தார். பத்மநாபத்துக்கு ஆதரவாக காபு சமூகத்தினர் பல்வேறு இடங்களில் கையில் சாப்பாடு தட்டு ஏந்தி போராட்டம் நடத்தினார்கள்.

இதனால் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் பரபரப்பு நிலவி உள்ளது. போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். கிரிலாம்புடி கிராமத்துக்கு தலைவர்கள் செல்ல போலீசார் அனுமதிக்கவில்லை.

இந்த நிலையில் பத்மநாபம் உண்ணாவிரதம் இன்று 3–வது நாளாக நீடித்தது. நேற்று அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்ய டாக்டர்கள் போலீசாருடன் வந்தனர்.

போலீசார் தன்னை கைது செய்யக்கூடும் என கருதிய பத்மநாபம் அறையை பூட்டிக் கொண்டு உண்ணாவிரதத்தை தொடர்ந்தார். அறையின் ஜன்னல் கதவு மட்டும் திறந்து வைக்கப்பட்டு உள்ளது.

ஜன்னல் வழியாக எவ்வளவோ கேட்டும் மருத்துவ பரிசோதனைக்கு பத்மநாபம் மறுத்து விட்டார் சமூக மக்களுக்கு எனது உயிர் போனாலும் பரவாயில்லை என்று திட்டவட்டமாக கூறினார்.

பத்மநாபத்துடன் உண்ணாவிரதம் இருந்த மனைவி பத்மாவதி மயங்கி விழுந்தார். அவரும் மருத்துவ பரிசோதனைக்கு மறுத்துவிட்டார்.

பத்மநாபம் உண்ணாவிரதம் இருப்பதை டி.வி.யில் பார்த்த குண்டூரை சேர்ந்த கேட்டீஸ்வர ராவ் என்பவர் மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார்.

ஏற்கனவே கிழக்கு கோதாவரியில் ஒருவர் இறந்து உள்ளார். ஒருவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top