இலங்கை மீதான அமெரிக்கத் தீர்மானத்திற்கு இந்தியா வாக்களிக்க மறுப்பு!

un councilஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் இலங்கை அரசு மீதான அமெரிக்கத் தீர்மானத்திற்கு இந்தியா வாக்களிக்க மறுப்பு தெரிவித்துள்ளது.

ஜெனீவாவில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் மாநாடு தற்பொழுது நடைபெற்று வருகிறது. இதில், இலங்கையின் மனித உரிமை மீறல்கள் குறித்து சர்வதேச விசாரணை கோரும் அமெரிக்கத் தீர்மானம் மீதான வாக்கெடுப்பு இந்திய நேரப்படி பிற்பகல் 2 மணியளவில் தொடங்கியது.

இவ் விவாதத்தின் முடிவில் இலங்கை மீதான தீர்மானம் தொடர்பாக வாக்கெடுப்பு நடக்க உள்ளது. இலங்கை அரசைச் சேர்ந்த இருபதுக்கும் மேற்பட்ட அதிகாரிகள் தங்களுக்கு ஆதரவாக வாக்களிக்க கோரி பல நாடுகளிடம் கேட்டு கொண்டுள்ளனர்.ஆனாலும் சென்ற முறை போலவே பல நாடுகளும் இலங்கைக்கு எதிராகவே வாக்களிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கை இந்த தீர்மானத்தை மறுத்தாலும் ஐ.நா.வின் உறுப்பினராக இலங்கை இருப்பதால் நடவடிக்கை எடுக்க முடியும் என்கிறார்கள் மனித உரிமையாளர்கள்.

இதனிடையே இலங்கை மீதான தீர்மானம் தொடர்பாக பல நாடுகள் ஆதரவாகவும் எதிராகவும் கருத்து தெரிவித்த நிலையிலும், இந்த தீர்மானம் தொடர்பாக இந்தியா எந்த நிலைபாட்டை தெரிவிக்காமல் மவுனம் காத்து வந்தது. இந்நிலையில் தனது தரப்பு வாதத்தை முன்வைத்து பேசிய இந்தியா, இத்தீர்மானம் மீது வாக்களிக்க மறுப்பு தெரிவித்தது. மேலும் இந்தியா தரப்பில் பேசிய பிரதிநிதி, இந்த தீர்மானத்தை எதிர்ப்பதாகவும், இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் இலங்கை மேற்கொண்டு வரும் பணிகள் பாதிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top