ஐ.பி.எல். ஏலத்தில் தமிழக வீரரை 4.5 கோடிக்கு வாங்கியது பூனே

ஒரு சர்வதேச போட்டியில் கூட களம் இறங்காத தமிழகத்தை சேர்ந்த முருகன் அஸ்வின் என்ற இளம் வீரரை,  புனே அணி ரூ. 4.5 கோடிக்கு ஒப்பந்தம் செய்துள்ளது.

வரும் 2016-ம் ஆண்டு ஐ.பி.எல். போட்டிக்கான வீரர்கள் ஏலம் இன்று பெங்களுருவில்  நடைபெற்றது. இதில் அடையாளமே தெரியாத முருகன் அஸ்வின் என்ற தமிழக வீரரை,  சுமார் நாலரை கோடிக்கு புனே அணி ஏலம் எடுத்துள்ளது. அருமையான லெக் ஸ்பின்னரான இவரை அடையாளம் கண்டு ஏலத்தில் எடுத்ததாகவும்,  வரும் ஐ.பி.எல். தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தும் வீரராக முருகன் வலம் வருவார்” என்றும் அந்த அணி நம்பிக்கை தெரிவித்துள்ளது.

கடந்த 1990-ம் ஆண்டு பிறந்த முருகன் அஸ்வினுக்கு தற்போது 25 வயதாகிறது. தமிழ்நாடு அணியில் இடம் பெற்றிருந்தார். அருமையாக லெக் பிரேக் வீசக் கூடியவர். வலது கை பேட்ஸ்மேனும் கூட. கடந்த 2012-ம் ஆண்டு முதல் தமிழக அணிக்காக விளையாடி வருகிறார்.

இந்த ஐ.பி.எல். ஏலத்தை பொறுத்தவரை மார்ட்டின் குப்தில் போன்ற பல நட்சத்திர வீரர்கள் கூட ஏலம் எடுக்கப்படாத நிலையில், முருகன் அஸ்வினை இவ்வளவு தொகை கொடுத்து புனே அணி வாங்கியது பிற அணிகளையும் வியக்க வைத்துள்ளது. முருகன் அஸ்வினின் குடும்பத்தினர் சென்னையில்தான் வசித்து வருகின்றனர். அவர்களும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top