முகிலனின் சமரசமற்ற போராட்டம் : நீதிமன்ற பிணையில் விடுதலை

முகிலன்கூடன்குளம் அணுஉலை எதிர்ப்பு போராட்டத்தில், 2,27,000 மக்கள் மீது போடப்பட்ட 380 வழக்குகளில், 248 வழக்கை மட்டும் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தமிழக அரசு இதுவரை திரும்ப பெற்று உள்ளது. இன்னும் நிலுவையில் உள்ள கூடன்குளம் அணுஉலை எதிர்ப்பு போராட்ட வழக்குகள் 132 வழக்குகளில் ஒரு லட்சம்(1,00,000) மக்கள் மீது வழக்கு உள்ளது.

இப்போது தமிழக அரசு திரும்பப் பெறாமல் உள்ள 132 வழக்கில், போராட்டக் குழு தலைவர்களான எங்கள் மீது கிட்டத்தட்ட அனைத்து வழக்குகளும் உள்ளது. 132 வழக்குகளும்- தேச துரோகம் (இதச பிரிவு-124-ஏ) – அரசுக்கு எதிரான யுத்தம்((இதச பிரிவு-121) – வெடிகுண்டு வீசிய வழக்கு-பொது சொத்துகளுக்கு சேதாரம் – கொலைமுயற்சி – இந்திய இறையாண்மைக்கு எதிராக செயல்படுவது என்ற மிக மிக கடுமையான பிரிவுகளில் உள்ளது.

போராட்டம் தொடங்கி 4 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில் கூட ஒரு வழக்கிற்கு கூட இதுவரை குற்றப்பத்திரிக்கை கொடுத்து, தமிழக அரசு வழக்கை நடத்தவில்லை. போராட்டத்தை முன் நின்று நடத்திய எங்களைப் போன்ற போராட்ட தலைவர்கள் யாருக்கும் சம்மன் கொடுக்காமல், மக்களுக்கு மட்டும் ஒருவருக்கு 10 வழக்கு வரை சம்மன் என 2000 பேருக்கு சம்மன் தயாரித்து, அதில் 400 பேருக்கு மட்டும் சம்மன் கொடுத்து, மக்களை நீதிமன்றத்தில் வாய்தா, வாய்தா என தமிழக அரசு மக்களை கடந்த 5 மாதமாக அலைய வைத்து வருகிறது. இப்படி செய்வதை தமிழக அரசு உடனே கைவிடக் கோரியும்.

இந்த வழக்கின் மூலம் மக்களை காவல்துறை தொடர்ந்து அச்சுருத்திவருவதால் இந்த பொய் வழக்குகளில் மக்களை காக்க தன்னை சிறை படுத்தி அரசின் பித்தாலாட்டத்தை அம்பலப்படுத்த தோழர் முகிலன் சரணடைந்தார். அணு உலை அமைப்பதில் இந்திய அரசு புதிய கொள்கை முடிவை எடுத்துள்ளது. இடப்பற்றாக்குறை, பணியாளர் குடியிருப்பு, பாதுகாப்பு உள்ளிட்ட காரணிகளை கருத்தில் கொண்டு, ஏற்கெனவே அணு உலை செயல்படும் இடங்களிலேயே மேலும் அணு உலைகளை அமைப்பது என இந்திய அரசு தீர்மானித்துள்ளது.

அதன்படி கூடன்குளத்தில் 3,4,5,6 எனத் தொடர்ந்து இந்திய அரசு அணு உலைப் பூங்கா அமைக்க திட்டமிட்டு உள்ளதை கைவிடக் கோரி தமிழக அரசு அழுத்தம் கொடுக்க கோரியும் இப்போது நான் சரணடைவதின் மூலம் தமிழக அரசின் பொய்வழக்கு பற்றியும், கூடன்குளம் அணு உலையில் வெளி வந்துள்ள அணுக்கழிவை பற்றியும் நாடெங்கும் மக்களிடம் – அரசியல் இயக்கங்களிடம் இதை ஒரு விவாதப் பொருளாக மாற்றவும் 132 வழக்குகளுக்காக நீதிமன்றத்தில் திருச்சி கோர்ட்டில் சரண் அடைந்தார். அவரை பாளை ஜெயிலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

சிறையிலும்  முகிலன் ஜனவரி ஒன்று அன்று தாமிரபரணியில் பெப்சிக்கு அனுமதி கொடுப்பது எதிர்த்தும் கூடங்குளத்தில் மூன்றாவது நாங்காவது அணுவுலை இயக்கபடுவதை எதிர்த்தும் ஒரு நாள் உண்ணாவிரத்ததில் ஈடுபட்டார் .அதன் பின் கடந்த 30 தேதியில் இருந்த்து 3 நான்காவது அணு உலைக்கு எதிராக தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட தோழர் முகிலன் பாளை அரசு மருத்துவமனையில் அனுமத்திக்கப்பட்டார். அங்கும் தோழர் முகிலன் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டார்.

இதனை தொடர்ந்து அவர் மீதான வழக்குகளில் தேசவிரோதம் அரசுக்கு எதிரான போர் தோடுத்தல் போன்ற பிரிவுகளை வழக்கில் இருந்து நீக்கி விட்டு அவரை நீதிபதி சொந்த பிணையில் விடுதலை செய்தார். போராடுகின்ற மக்களை வழக்குகளை காட்டி அச்சுருத்தும் அரசு வாய்தா போட்டு அலைக்களிக்கும் நீதிமன்றமும் சிறை செல்ல தாயார் என்று சொன்ன முகிலன்னை கண்டு அஞ்சுகிறது. அவர் மீதான வழக்கு பிரிவுகளை அவர்களாகவே நீக்குகிறார்கள்; பிணைக்கும் ஆட்கள் கேக்காமல் நீதி மன்றமே சொந்த பிணை கொடுக்கிறது;  மக்களுக்காக துணிந்து நிற்கும் போது அரசு பணிந்து போகிறது போராட்டங்களே எல்லாவற்றையும் சாத்தியமாக்குறது.

முகிலன் மீதான வழக்குப் பிரிவுகளை நீக்கியவர்கள் மக்கள் மீதான வழக்குகளை இன்னும் நீக்கவில்லை.  அவர்களே முன் வந்து நீக்கியதன் மூலம் இந்த 132 வழக்குகளும் பொய் வழக்கு என்பது அம்பலப்பட்டு உள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top