தொடரும் இனப்படுகொலைக்கு எதிராக போராட்டம்

இலங்கையில் தர்சன் எனும் 6 வயது சிறுவனை பாலியல் சித்ரவைதைக்கு ஆளாக்கி, ஒரு பெரிய கல்லை அவன் உடலில் கட்டி கிணற்றில் வீசி எறித்து கொலை செய்ததைக் கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மே 17 இயக்கம் சார்பில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மே 17 இயக்கம், மதிமுக, விடுதலை தமிழ் புலிகள், தமிழர் விடியல் கட்சி, டிசம்பர் 3 இயக்கம் உள்ளிட்ட அமைப்புகள் கலந்து கொண்டன. போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் அமெரிக்க தீர்மானத்தைக் கண்டித்தும் இந்திய அரசு இலங்கை அரசும் கூட்டு குற்றவாளிகள் என்றும் முழக்கங்கள் எழுப்பினர்.

12648066_1151437968234747_238941860_n

12650688_1151439404901270_1571391216_n

12659864_1151439084901302_55355169_n

12660227_1151439514901259_1110377536_n

12660429_1151439248234619_693350388_n

12665634_1151439478234596_775823762_n

12666232_1151439458234598_299447485_n

12666379_1151438081568069_232080061_n
12666504_1151439888234555_1384628776_n

12666531_1151438758234668_282091293_n

12666533_1151438201568057_1099483768_n

மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் பேசும் போது நாளை 6 ஆம் தேதி காலை ஐ.நாவின் மனித உரிமை தலைவர் அல் உசேன் இலங்கை வருகிறார். பிப்ரவரி 6 முதல் 9 வரை இலங்கையில் தங்கியிருப்பதாக செய்திவெளியிடப்பட்டிருக்கிறது. இந்த பயணத்திற்கும் இலங்கை மீதான தீர்மானத்திற்கும் சம்பந்தமில்லை என்று இலங்கை அரசு சொல்லியிருக்கிறது. அல்-ஹீசைனை சந்தித்து ஐ.நா மீது குற்றச்சாட்டு வைக்கப்போவதாக இலங்கையின் எதிர்க்கட்சி கூட்டமைப்பு பேட்டி கொடுத்திருக்கிறது. இந்நிலையில் இந்தியாவின் சுஸ்மா சுவராஜும் இலங்கை செல்வதாக செய்தி வெளியாகி இருக்கிறது.

குற்றவாளி மீது எந்த நெருக்கடியை ஐ.நா கொடுக்காத பொழுதிலும் கூட இலங்கை தரப்பு ஐ.நா தங்களை நெருக்கடிக்குள்ளாக்குவதாக குற்றம் சாட்டி, ஐநாவினை நெருக்கடிக்கு தள்ளி தங்களது தரப்பினை வலிமையாகப் பாதுகாக்கிறது. ஆனால் எந்த வித நியாயமும் ஐ.நாவிடம் இருந்து நமக்கு கிடைக்காத பொழுதில் கூட , ‘ஐ.நா எதோ நிறைய சாதிக்கப் போகிறது என்றும், அமெரிக்கா நம்மை பாதுகாக்கும் என்றும், இவர்களுக்கு எதற்கு நெருக்கடி கொடுக்கிறீர்கள் என்றும்’ பேசுகிறவர்களை விட பெரும் நெருக்கடியை தமிழர்களுக்கு கொடுப்பவர்கள் எவரும் இல்லை. இந்நிலையில் ஈழ விடுதலை கோரிக்கையை கைவிடுகிறோம் என்றெல்லாம் பேட்டி வெளியாவதை வேதனையுடன் பார்க்க வேண்டியிருக்கிறது.

மேலும் தர்சன் படுகொலையை அரசியலாக்க வேண்டாம், வதந்திகளை பரப்பவேண்டாமென்று தமிழ் ஊடகங்களை இலங்கை பேச வைக்கிறது. அந்த ஊடகங்களை பார்த்து பரிதாபப்பட வேண்டியிருக்கிறது.

என்றும் தமிழகத்தில் நடக்கும் சாதிய ஒடுக்கு முறைகள் பற்றியும் பேசினார். 2009 பின் தமிழகத்தில் ஈழ ஆதரவு போராட்டம் எப்படி உடைக்கப்படுகிறது என்பதைப் பற்றியும் அவர் பேசினார்.

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top