டி 20 ஆசிய கோப்பை, உலகக் கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு

indian_team__large

20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியே, ஆசியக்கோப்பை மற்றும் உலகக்கோப்பை ஆகிய இரண்டு தொடர்களிலும் பங்கேற்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய அணி வீரர்கள் விவரம் வருமாறு:

மகேந்திர சிங் தோனி தலைமையிலான இந்திய அணியில், ஷிகர் தவான், ரோகித் ஷர்மா விராட் கோலி, அஜிங்க ரஹானே, யுவராஜ் சிங், சுரேஷ் ரெய்னா ஆகிய பேட்ஸ்மேன்கள் இடம் பெற்றுள்ளனர்.

தமிழக வீரர் அஸ்வின், ஆல்வுண்டர் ரவீந்திர ஜடேஜா, ஆகியோருக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. பந்துவீச்சாளர்கள் முகமது ஷமி, ஹர்பஜன் சிங், ஆசிஷ் நெஹ்ரா ஆகியோர் இந்திய அணியில் இடம் பிடித்துள்ளனர். இளம் வீரர்கள் ஹர்த்திக் பாண்டியா, பும்ரா, பவன் நெகி ஆகியோருக்கும் உலகக்கோப்பைக்கான அணியில் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் பங்களாதேஷில் வரும் 24-ஆம் தேதி தொடங்கி மார்ச் 6-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. ‌அதனைத்தொடர்ந்து உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி மார்ச் 8-ஆம் தேதி தொடங்கவுள்ளது. மகளிர் உலகக்கோப்பைக்கான இந்திய அணியில், காமினி, நிரஞ்சனா ஆகிய தமிழக வீராங்கனைகள் இடம் பெற்றுள்ளனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top