சார்க் நாடுகளின் 12வது தெற்காசிய விளையாட்டு போட்டிகள் இன்று தொடக்கம்: 8 நாடுகள் பங்கேற்பு

சார்க் அமைப்பில் உள்ள இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம், பூடான், நேபாளம், மாலத்தீவு ஆகிய 8 நாடுகளை சேர்ந்த 2500 வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்ளும் 12வது தெற்காசிய விளையாட்டு போட்டி இன்று தொடங்குகிறது. இம்முறை அஸாம் மற்றும் மேகாலயா ஆகிய இரு மாநிலங்கள் இணைந்து போட்டியை நடத்துகின்றன.

குவாஹாட்டி இந்திரா காந்தி தடகள மைதானத்தில் இன்று நடைபெறும் தொடக்க விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு போட்டிகளை தொடங்கி வைக்கிறார். அதேவேளையில் மேகாலயா தலைநகரான ஷில்லாங்கில் தொடக்க விழா நிகழ்ச்சிகள் நாளை நடைபெறுகிறது.

தெற்காசிய விளையாட்டு போட்டி இந்தியாவில் நடைபெறுவது இது 3வது முறையாகும்.

1987ல் கொல்கத்தாவிலும், 1995ல் சென்னையிலும் தெற்காசிய போட்டிகள் நடத்தப்பட்டுள்ளது. வங்கதேச நாட்டின் தலைநகரான டாக்காவில் கடந்த 2010ல் நடைபெற்ற தெற்காசிய விளையாட்டு போட்டியில் இந்தியா 90 தங்கத்துடன் மொத்தம் 175 பதக்கங்களை பெற்று முதலிடம் பிடித்தது.

fddfகுவாஹாட்டியில் தடகளம், கூடைப் பந்து, சைக்கிள், கால்பந்து, ஹேண்ட் பால், ஹாக்கி, கபடி, கோ-கோ, துப் பாக்கிச்சூடுதல், ஸ்குவாஸ், நீச்சல், டென்னிஸ், டிரையத்லான், கைப்பந்து, பளுதூக்குதல், மல்யுத்தம், ஆடவர் கால்பந்து ஆகிய விளையாட்டுகள் நடை பெறுகிறது. ஷில்லாங்கில் வில்வித்தை, பாட்மிண்டன், குத்துச்சண்டை, ஜூடோ, டேபிள் டென்னிஸ், தேக்வாண்டோ, வூசு, பெண்கள் கால்பந்து ஆகிய விளையாட்டு போட்டிகள் நடக்கிறது.

சொந்த மண்ணில் போட்டி நடை பெறு வதால் கடந்த ஆண்டைவிட கூடுதலாக இந்தியாவுக்கு பதக்கங்கள் கிடைக் கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒலிம் பிக்கில் பதக்கம் வென்ற இந்தியா வின் மேரிகோம், ககன் நரங் போட்டிகளில் பங்கேற்கின்றனர். வில்வித்தை, தடகளம், பாட்மிண்டன், குத்துச்சண்டை, துப்பாக்கிச் சூடுதல், நீச்சல், டேபிள் டென்னிஸ், பளுதூக்குதல், மல்யுத்தம், ஜூடோ, வூசு ஆகிய போட்டிகளில் இந்தியா ஆதிக்கம் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தெற்காசிய போட்டியில் 7 முறை இந்தியா பதக்கப்பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது. அதேவேளையில் பாகிஸ்தான் பெரும்பாலும் இரண்டாவது இடத்தை கைப்பற்றியுள்ளது. இம்முறை இந்த இடத்தை பிடிக்க இலங்கை கடுமையாக முயற்சிக்கக்கூடும்.

போட்டியில் பங்கேற்கும் இந்தியாவை தவிர மற்ற ஆசிய நாடுகளில் வில்வித்தை, பாட்மிண்டன், குத்துச்சண்டை, துப்பாக் கிச்சுடுதல், மல்யுத்தம் ஆகிய போட்டி கள் பிரபலம் கிடையாது. மேலும் இந்த வகையான போட்டிகளில் இந்தியா வலுவான அணிகளையும், வீரர்களையும் கொண்டுள்ளது. இதனால் இந்த பிரிவுகளில் இந்தியா தங்க பதக்கங் கள் வெல்வது உறுதி. ஆடவர் ஹாக்கி யில் பாகிஸ்தான் அணி ஹாட்ரிக் பட்டம் வெல்லும் முனைப்புடன் உள்ளது.

உள்ளூரில் போட்டி நடைபெறுவதால் மேரி கோம், சரிதா தேவி ஆகியோரது ஆட் டத்தை காண ரசிகர்கள் அதிக அளவில் திரள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆடவர் ஹாக்கியில் இந்தியா-பாகிஸ் தான் மோதும் ஆட்டம் 8ம் தேதி குவா ஹாட்டியில் நடைபெறுகிறது. துப்பாக்கிச் சுடுதலில் வங்கதேசம், இந்தியாவுக்கு போட்டியாக இருக்கும் என கூறப்படுகிறது. இந்தியா மற்றும் இலங்கை நாடுகள் மட்டுமே 23 விளையாட்டு போட்டிகளிலும் பங்கேற்கிறது. வங்கதேசம், பாகிஸ்தான், நேபாளம் ஆகிய நாடுகளில் 22 போட்டிகளில் கலந்துகொள்கிறது.

இன்று நடைபெறும் தொடக்க விழாவில் பிரம்மாண்ட கலை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வட கிழக்கு பதியை சேர்ந்த ஜூபின் ஹார்க், அங்கராக் மகந்தா, நஷித் அப்ரின் ஆகியோர் கலந்துகொண்டு புகழ்பெற்ற பாடல்களை பாடுகின்றனர். மேலும் புகழ்பெற்ற ஷில்லாங் இசைக்குழுவும் மகிழ்விக்க தயாராக உள்ளது.

தெற்கு ஆசிய நாடுகளில் ஓடும் பிரம்மபுத்திரா (இந்தியா), சிந்து (பாகிஸ் தான்), காபூல் நதி (ஆப்கானிஸ்தான்), கோஸி (நேபாளம்), பத்மா (வங்கதேசம்), மகாவேலி (இலங்கை), மாலத்தீவு ஏரி (மாலத்தீவில் நதி கிடையாது), ஆகிய நதிகளை மையமாக வைத்து இசை நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

தொடக்க நாளில் இரு விளையாட்டு களில் போட்டிகள் நடைபெறுகிறது. ஆடவர் கால்பந்து மற்றும் கைப்பந்தில் ஆடவர், மகளிர் பிரிவிலும் போட்டிகள் நடக்கிறது. குவாஹாட்டியுடன் போட்டியை இணைந்து நடத்தும் ஷில்லாங்கில் தொடக்க விழா நிகழ்ச்சிகள் நாளை நடைபெறுகிறது.

இந்தியா கடந்த முறை 175 பதக்கங்களுடன் முதலிடம் பிடித்தது. சுமார் 2 ஆயிரம் வீரர்கள் பங்கேற்ற நிலையில் 23 விளையாட்டுகளில் 157 பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றது. இந்த முறை 23 விளையாட்டுகளில் 228 பிரிவுகளில் போட்டிகள் நடக்கிறது. மொத்தம் 228 தங்க பதக்கங்கள், 228 வெள்ளி பதக்கங்கள், 308 வெண்கல பதக்கங்கள் வழங்கப்பட உள்ளது. இரு மாநிலத்திலும் நடைபெறும் போட்டியில் தடகள வீரர்கள் மற்றும் பணியாளர்கள் என மொத்தம் 3,333 பேர் கலந்துகொள்கின்றனர். முதன்முறையாக ஆடவர் பிரிவில் நடைபெறும் அனைத்து போட்டிகளும் மகளிர் பிரிவிலும் நடத்தப்பட உள்ளது.

12வது தெற்காசிய விளையாட்டு போட்டியின் தீம் பாடலாக ‘உலகமே விளையாட்டு மைதானம்’ என்ற பாடல் உருவாக்கப்பட்டுள்ளது. இது அஸாமை சேர்ந்த பிரபல பாடல் ஆசிரியர், இசையமைப்பாளர், பாடகர், கவிஞர், திரைப்பட தயாரிப்பாளர் என பன்முகம் கொண்ட பூபென் ஹஜாரிகாவின் படைப்புகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

12வது தெற்காசிய விளையாட்டு போட்டியின் சின்னமாக ‘திஹோர்’ உள்ளது. இந்த சின்னமானது தெற்காசிய பிராந்தியத்தில் அமைதி, முன்னேற்றம், வளமை ஆகியவற்றை வலியுறுத்துவதாக அமைந்துள்ளது.

மகளிர் ஹாக்கியில் இந்தியா தங்கம் வெல்ல வாய்ப்புள்ளது. 36 வருடங்களுக்கு ஒலிம்பிக்கில் பங்கேற்க தகுதி பெற்றுள்ள மகளிர் ஹாக்கி அணி மீது மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது. கபடியில் இரு பிரிவிலும் இந்தியா சாதிக்கக்கூடும். ஆடவர் பிரிவு கபடியில் பாகிஸ்தான் அணி நெருக்கடி கொடுக்கக்கூடும். அந்த அணி சமீபத்தில் ஈரான் போட்டியில் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான் இம்முறை 21 விளையாட்டுகளில் பங்கேற்கிறது. வூசு, பளுதூக்குதல், ஜூடோ, தேக்வாண்டோ, கபடி, ஹேண்ட்பால், ஸ்குவாஸ், கைப்பந்து, ஹாக்கி ஆகியவற்றில் அந்த அணி பதக்கங்கள் வெல்லும் என கருதப்படுகிறது.

வரும் 16ம் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில் இந்தியாவில் இருந்து 521 பேர் கலந்துகொள்கின்றனர். இதில் 245 மகளிரும் அடங்குவர். நேபாளத்தில் இருந்து 381 பேரும், வங்கதேசத்தில் இருந்து 370 பேரும், பாகிஸ்தானில் இருந்து 346 பேரும், இலங்கையில் இருந்து 484 பேரும், ஆப்கானிஸ்தானில் இருந்து 254 பேரும், பூடானில் இருந்து 87 பேரும், மாலத்தீவில் இருந்து 184 பேரும் கலந்துகொள்கின்றனர். 12வது தெற்காசிய போட்டிகளை நடத்துவதற்காக அஸாம், மேகாலயா மாநில அரசுகளுக்கு மத்திய அரசு ரூ.150 கோடி நிதி ஒதுக்கியது. இதுதவிர பாதுகாப்பிற்காக மட்டும் அஸாம் மாநிலத்துக்கு ரூ.60 கோடியும், மேகாலயாவுக்கு ரூ.7 கோடியும் வழங்கப்பட்டுள்ளது.

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top