தமிழகத்தில், அதிமுக அரசு ஊழலை ஊக்குவிப்பதாக ராமதாஸ் விமர்சனம்

ramadoss6தமிழகத்தில், அதிமுக அரசு ஊழலை ஊக்குவிப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் விமர்சித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசு ஊழியர்கள் மீது ஊழல் புகார் பதிவு செய்வதற்கு கண்காணிப்பு ஆணையரின் அனுமதி பெற வேண்டும் என்ற அரசாணை ஊழல்வாதிகளை பாதுகாக்கும் நோக்கத்துடன் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார்.

தமிழக அரசின் ஆணை நடைமுறைக்கு வந்தால், ஊழல் பெருகுவதோடு, நிர்வாகம் சீர்குலையும் என்று ராமதாஸ் கூறியுள்ளார். ஊழலுக்கு துணைபோகும் தமிழக அரசின் ஆணையை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள ராமதாஸ்‌, ஊழலுக்கு முடிவு கட்ட தமிழகத்தில் லோக் ஆயுக்தா அமைப்பு மற்றும் பொதுச் சேவைகள் பெறும் உரிமை சட்டத்தை கொண்டு‌வர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top