ஜிகா வைரஸ் பாதிக்கப்பட்ட நாடுகளில் இருந்து வருவோரிடம் ரத்ததானம் பெற வேண்டாம்: உலகசுகாதார நிறுவனம் எச்சரிக்கை

Captureஜிகா வைரஸ் பாதிக்கப்பட்ட நாடுகளில் இருந்து வருவோரிடம் ரத்ததானம் பெற வேண்டாம் என, அனைத்து நாடுகளையும் உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.தெற்கு மற்றும் மத்திய அமெரிக்கா, கரீபியன் பகுதிகளைச் சேர்ந்த 26 நாடுகளில் கொசுக்களின் மூலமாக தொற்றும் ஜிகா வைரஸ் நோய் பரவி உள்ளது.

இந்த நாடுகளில் இருந்த வரும் பயணிகளின் ரத்தத்தில், ஜிகா வைரஸ் தொற்று இருக்கக் கூடும் என்பதால், அவர்களிடம் இருந்து ரத்ததானம் பெறுவதை அனைத்து நாடுகளும் தவிர்க்க வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது. கனடா மற்றும் பிரிட்டன் நாடுகள் ஏற்கனவே ஜிகா வைரஸ் பாதிக்கப்பட்ட நாடுகளில் இருந்து வருவோரிடம் ரத்ததானம் பெறுவதை நிறுத்தி வைத்துள்ளன.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top