நேஷனல் ஹெரால்டு வழக்கு: சோனியா – ராகுல் காந்தி சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல்

8bcd1a18-f125-4887-b8c9-6cf92d2e57c6_S_secvpfநேஷனல் ஹெரால்டு பத்திரிகை தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் மீது பா.ஜனதா கட்சி தலைவர் சுபபிரமணியசாமி டெல்லி கோர்ட்டில் நிதி முறைகேடு வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கில் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் ஆஜராக வேண்டும் என்று விசாரணை நீதிமன்றம் சம்மன் அனுப்பியது. சம்மனை ரத்து செய்யக் கோரி டெல்லி ஐகோர்ட்டில் சோனியா, ராகுல் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதை ஏற்க மறுத்த ஐகோர்ட்டு சோனியா, ராகுல் ஆகியோர் கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டது. அதன்படி இருவரும் கோர்ட்டில் ஆஜராகி ஜாமீன் பெற்றனர்.

இதற்கிடையே இந்த வழக்கில் சம்மனுக்கு ஆஜராக வேண்டும் என்ற டெல்லி ஐகோர்ட்டின் உத்தரவை எதிர்த்து சோனியா, ராகுல் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வருகிறது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top