கோர்ட்டு ஜாமீன் வழங்கியும் அரசு ஆஸ்பத்திரியில் இருந்து வெளியேற மறுக்கும் அணு உலை எதிர்ப்பாளர் உண்ணாவிரதம் இருப்பதால் பரபரப்பு

sssssssssssssssssssssssssஈரோடு சென்னிமலையை சேர்ந்தவர் முகிலன் (வயது46). இவர் கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிராக இடிந்தகரையில் தங்கி இருந்து உதயகுமாருடன் இணைந்து போராட்டம் நடத்தினார். இது தொடர்பாக இவர் மீது கூடங்குளம் போலீசார் ஏராளமான வழக்குகள் பதிவு செய்தனர்.

இதில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் பேரில் பல வழக்குகளை தமிழக அரசு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. ஆனால் குற்ற வழக்குகள் தள்ளுபடி செய்யப்படவில்லை. இந்த வழக்குகள் வள்ளியூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்தது.

இந்த நிலையில் கடந்த மாதம் முகிலன் இந்த வழக்குகள் தொடர்பாக திருச்சி கோர்ட்டில் சரண் அடைந்தார். அவரை பாளை ஜெயிலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். பாளை ஜெயிலில் அடைக்கப்பட்டு இருந்த முகிலன், கூடங்குளத்தில் 3, 4–வது அணு உலை திட்டம் தொடங்க இருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 31–ந்தேதி சிறை வளாகத்தில் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் நடத்தினார்.

அதிகாரிகள் வற்புறுத்தியும் அவர் சாப்பிட மறுத்ததால், சிறை அதிகாரிகள் நேற்று அவரை பாளை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கும் இன்று 4–வது நாளாக முகிலன் சாப்பிட மறுத்து உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் நேற்று வள்ளியூர் நீதிமன்றத்தில் முகிலனுக்கு நிபந்தனையற்ற ஜாமீன் வழங்கப்பட்டது. இந்த உத்தரவை இன்று சிறை அதிகாரிகள் முகிலனிடம் காட்டி ஐகிரவுண்டு ஆஸ்பத்திரி சிறை பிரிவில் இருந்து வெளியேறுமாறு உத்தரவிட்டனர்.

ஆனாலும் முகிலன் வெளியேற மறுத்து, தொடர்ந்து ஐகிரவுண்டு ஆஸ்பத்திரி சிறை பிரிவில் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top