ஜிகா வைரஸ் நெறிமுறை வெளியிட்ட மத்திய அரசு

nbnbஜிகா வைரஸ் வழிகாட்டி நெறிமுறைகளை மத்திய அரசு நேற்று வெளியிட்டது. சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி நட்டா வெளியிட்ட அறிக்கையில் இதுபற்றி கூறியிருப்பது: சர்வதேச விமான நிலையங்கள், துறைமுகங்களில் ஜிகா வைரஸ் குறித்து எச்சரிக்கை பலகை வைக்கப்படும். வைரஸ் பாதிப்பு உள்ள நாடுகளில் இருந்து வருபவர்கள், சுங்கத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். வைரஸ் தாக்கம் இந்தியாவில் இல்லை. ஜிகா வைரஸ் பரவாமல் இருக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
சுகாதாரத்துறை பொது இயக்குனர் தலைமையில்  கூட்டு கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டு உள்ளது. வைரஸ் ஆய்வு நடவடிக்கைகள் மேற்கொள்ள இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்திடம் அறிவுறுத்தி உள்ளோம். சுகாதார கண்காணிப்பு மையங்களில் அதிரடி மருத்துவக் குழுவினர் நியமிக்கப்படுகிறார்கள். டெல்லி தேசிய நோய் தடுப்பு மையத்தில் வைரஸ் ஒழிப்பு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது. வைரஸ் பாதிப்பு நாடுகளுக்குச் செல்வதை பயணிகள் குறிப்பாக கர்ப்பிணிகள் ரத்து செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top