வங்கிகளுக்கான குறுகிய கால கடன் வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை: ரிசர்வ் வங்கி அறிவிப்பு

764babff-e037-4223-8183-a1c1a2ac9bfc_S_secvpfசந்தை எதிர்பார்ப்புக்கு ஏற்ப வங்கிகளுக்கான குறுகிய கால கடன் வட்டி விகிதத்தில்(ரெப்போ) எவ்வித மாற்றமும் இல்லை என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது

மும்பையில் இன்று நடைபெற்ற கடன் கொள்கை குறித்த ஆய்வு கூட்டத்தில் ஆளுநர் ரகுராம் ராஜன் இதனை தெரிவித்தார். வங்கிகளுக்கான குறுகிய கால கடன் வட்டி விகிதம் 6.75 ஆக தொடரும் என்று அவர் கூறினார்.

மேலும், “பணப்புழக்க சரிசெய்தல் வசதிக்கான வட்டி விகிதம் 5.75 சதவீதமாகவும், குறுகியகால கடனுக்கான வட்டி விகிதம் 7.75 சதவீத அளவிலே இருக்கும். அதேபோல ரொக்க கையிருப்பு விகிதம் 4 சதவீதம் நிலையில் மாற்றம் இல்லாமல் இருக்கிறது.” என்றும் ரகுராம் ராஜன் தெரிவித்தார்.

இதனிடையே, பட்ஜெட் கூட்டத்தொடர் முடிந்த பிறகு, வட்டி குறைப்புக்கு சாதகமான சூழ்நிலை வரும் போது வட்டி விகிதம் குறைக்கப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top