ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: செர்பியாவின் ஜோகோவிச் 6வது முறையாக சாம்பியன்

djokernole__largeஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் முதல் நிலை வீரர் ஜோக்கோவிச் சாம்பியன் பட்டம் வென்றார்.

ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதியாட்டத்தில் செர்பிய வீரர் நோவக் ஜோக்கோவிச், இரண்டாம் நிலை வீரரான பிரிட்டனின் ஆன்டி முர்ரே-வை எதிர்த்து விளையாடினார். இந்தப் போட்டியில்‌, சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜோக்கோவிச் 6-1, 7-5, 7-6 என்ற கணக்கில் வெற்றியை வசமாக்கினார்.

ஆஸ்திரேலிய ஓபனில் சாம்பியன் பட்டம் வென்றுள்ள ஜோக்கோவிச்-சின் சாதனைக் களங்களை சற்று திரும்பிப் பார்க்கலாம்

ஆஸ்திரேலிய ஓபனில் 2008, 2011, 2012, 2013, 2015-ஆம் ஆண்டுகளை தொடர்ந்து, ‌ஆறாவது முறையாக ஜோக்கோவிச் சாம்பியன் பட்டத்தை வென்றிருக்கிறார். விம்பிள்டனில் 2011, 2014, 2015 ஆகிய ஆண்டுகளில் ஜோக்கோவிச் பட்டம் வென்றிருக்கிறார். அமெரிக்க ஓபனில் 2011, மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் ஜோக்கோவிச் பட்டம் வென்றிருக்கிறார். 11 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ள செர்பிய நாயகன் ஜோக்கோவிச்-சுக்கு பிரஞ்சு ஓபனில் பட்டம் வெல்வது மட்டும் இதுவரை எட்டாக்கனியாகவே இருக்கிறது இந்தாண்டு இந்தக்குறையை போக்கும் முனைப்புடன் இருக்கிறார் ஜோக்கேவிச் இருக்கிறார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top