பதான்கோட் தாக்குதல்: உரிய விசாரணை நடத்தப்படும் என பாகிஸ்தான் பிரதமர் உறுதி

nawaz_fb__large

பதான்கோட் விமானப் படைத் தளம் மீதான தாக்குதல் குறித்து உரிய விசாரணை நடத்த பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் உறுதியளித்துள்ளார்.

லாகூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பதான்கோட் தாக்குதல் குறித்து விரைவாக விசாரணை நடத்தி முடிக்கப்படும் என்றும் கூறினார். தாக்குதலுக்கு பாகிஸ்தான் மண்ணை பயங்கரவாதிகள் பயன்படுத்தினார்களா என்பதைக் கண்டறிய வேண்டியது அரசின் பொறுப்பு என்றும் நவாஸ் ஷெரீஃப் தெரிவித்தார்.

இந்தியாவுடன் பேச்சுவார்த்தை சரியான திசையில் சென்று கொண்டிருந்த நிலையில், பதான்கோட் தாக்குதலால் அது எதிர்மறை விளைவை ஏற்படுத்தி ‌விட்டதாகவும் அவர் கூறினார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top