ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி 20 ஓவர் கிரிக்கெட்: இந்திய அணி ஹாட்ரிக் வெற்றி பெறுமா?

2c012ae2-7559-4e0e-960e-b718ec71a300_S_secvpfஆஸ்திரேலியாவுக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் ‘ஹாட்ரிக்’ வெற்றி பெறும் உத்வேகத்துடன் இந்திய அணி இன்று கடைசி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது.

டோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியின் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் இன்றுடன் நிறைவு பெறுகிறது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் இரண்டு 20 ஓவர் போட்டிகளில் இந்திய அணி 37 ரன் மற்றும் 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றி விட்டது. இந்த நிலையில் இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி சிட்னியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.

அதே போன்று கடைசி ஆட்டத்திலும் ஒருங்கிணைந்து விளையாடினால் ‘ஹாட்ரிக்’ வெற்றியை பதிவு செய்து விடலாம். இந்த தொடருக்கு முன்பாக தரவரிசையில் 8-வது இடத்தில் இருந்த இந்திய அணி 2 வெற்றிகளின் மூலம் 3-வது இடத்துக்கு வந்து விட்டது. இன்றைய ஆட்டத்திலும் வெற்றி பெற்றால் 20 ஓவர் அணிகளின் தரவரிசையில் ‘நம்பர் ஒன்’ அரியணையில் ஏறி விடலாம். அனேகமாக இந்திய அணியில் மாற்றம் ஏதும் இருக்காது.

கடந்த ஆட்டத்தின் போது தசைப்பிடிப்பில் சிக்கிய ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பிஞ்ச் இந்த ஆட்டத்தில் ஆடமாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய நேரப்படி பிற்பகல் 2.08 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top