நாளை கடைசி 20 ஓவர் ஆட்டம்: இந்தியா ஹாட்ரிக் வெற்றி பெறுமா?

fac73557-0f1e-436b-8761-6e161294455a_S_secvpfஇந்தியா– ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3–வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சிட்னி மைதானத்தில் நாளை நடக்கிறது.

அடிலெய்டில் நடந்த முதல் ஆட்டத்தில் 37 ரன்னிலும், மெல்போர்னில் நடந்த 2–வது ஆட்டத்தில் 27 ரன்னிலும் இந்தியா வெற்றி பெற்றது. இதனால் நாளைய ஆட்டத்திலும் வென்று இந்திய அணி ஹாட்ரிக் சாதனையுடன் ‘ஒயிட்வாஷ்’ செய்யுமா என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒரு நாள் தொடரை இழந்த இந்திய அணி நாளைய போட்டியிலும் வென்று ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் ஒயிட்வாஷ் செய்வதே சிறப்பாக இருக்கும்.

வீராட்கோலி பேட்டிங்கில் மிகவும் சிறப்பான நிலையில் உள்ளார். ரோகித் சர்மா, தவானும் நல்ல நிலையில் உள்ளனர். யுவராஜ்சிங் இந்த ஆட்டத்திலாவது பேட்டிங் செய்ய வருவாரா? என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.

முதல் 2 ஆட்டத்திலும் தோற்று தொடரை இழந்த ஆஸ்திரேலிய அணி சிட்னி போட்டியில் வென்று ஆறுதல் பெற விரும்புகிறது.

சிறப்பாக விளையாடி வந்த கேப்டன் ஆரோன் பிஞ்ச் நாளைய போட்டியில் காயத்தால் ஆடவில்லை. அவருக்கு பதிலாக உஸ்மான் குவாஜா இடம் பெற்று உள்ளார். வார்னர், சுமித் நியூசிலாந்துக்கு இன்று புறப்படுகிறார்கள். இதனால் வாட்சன், மேத்யூ வாடே, ஷான் மார்ஷ் ஆகியோரில் ஒருவர் கேப்டனாக தேர்வு பெறலாம்.

சிட்னி மைதானத்தில் நடைபெற இருக்கும் 4–வது 20 ஓவர் இதுவாகும். இந்திய அணி இங்கு 20 ஓவரில் ஆடுவது இல்லை

நாளைய ஆட்டம் இந்திய நேரப்படி பிற்பகல் 2.08 மணிக்கு தொடங்குகிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மற்றும் தூர்தர்ஷனில் இந்தப் போட்டியை நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top