125–வது பிறந்த நாளையொட்டி அம்பேத்கர் உருவம் பொறித்த 10 ரூபாய் நாணயம் வருகிறது: ரிசர்வ் வங்கி அறிவிப்பு

c1283984-4d42-4267-9ca7-d8fbae5a374b_S_secvpfஅம்பேத்கரின் 125–வது பிறந்த நாளையொட்டி அவரது உருவம் பொறித்த 10 ரூபாய் நாணயம் வெளியிடப்பட உள்ளது.

இது தொடர்பாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:–

சட்ட மேதை அம்பேத்கரின் 125–வது ஆண்டு பிறந்த நாளையொட்டி அவரது உருவம் பொறித்த 10 ரூபாய் நாணயத்தை மத்திய அரசு தயாரித்து வருகிறது. அந்த நாணயங்கள் விரைவில் புழக்கத்தில் விடப்பட உள்ளது.

நாணயத்தின் ஒரு புறத்தின் மேல் பகுதியில் அசோகர் தூணில் உள்ள நான்முக சிங்க உருவமும், கீழ்ப்பகுதியில் 10 என்ற எழுத்தும், மேல் பகுதியின் வலது புறத்தில் ‘பாரத்’ என்று தேவநாகரி மொழியிலும், இடது புறத்தில் ‘இந்தியா’ என்று ஆங்கிலத்திலும் பொறிக்கப்பட்டிருக்கும்.

நாணயத்தின் மறுபுறத்தில் அம்பேத்கரின் உருவமும், அதற்கு கீழே அம்பேத்கரின் 125–வது பிறந்த ஆண்டு என்று ஆங்கிலத்திலும் பொறிக்கப்பட்டிருக்கும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top