தொடர்ந்து 3-வது நாளாக நீடிக்கும் மீனவர்களின் வேலைநிறுத்த போராட்டம்!

தமிழக மீனவர்கள்இலங்கை அரசால் பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் 76 விசைப்படகுகளையும் மீட்க வலியுறுத்தி 3-ஆவது நாளாக மீனவர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அடுத்தக்கட்ட போராட்டம் குறித்து 6மாவட்ட மீனவர்கள் இன்று அவசர ஆலோசனைக் கூட்டமும் நடத்தினர். அதில், காரைக்காலிலுள்ள தனியார் துறைமுகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

நாகை, காரைக்கால், திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்ட மீனவர்களின் இந்த வேலைநிறுத்தப்ப போராட்டத்தால் 15ஆயிரத்திற்கும் அதிகமான விசைப்படகுகள் கடலுக்குச் செல்லவில்லை. இதனால், பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் மீனவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top