மருத்துவ மாணவி மோனிஷா உடல் இன்று மறு பிரேத பரிசோதனை

monisha_2712326fசர்ச்சைக்குரிய தனியார் இயற்கை மருத்துவ கல்லூரி மாணவி மோனிஷாவின் உடல், மீண்டும் மறு உடற்கூறு ஆய்விற்காக, விழுப்புரத்திலிருந்து, சென்னைக்கு இன்று கொண்டுவரப்படுகிறது.

உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாலும், தங்கள் தரப்பு மருத்துவர் முன்பு, உடற்கூறு ஆய்வு நடத்த வேண்டும் எனவும், மோனிஷாவின் தந்தை, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். இதை விசாரித்த உயர்நீதிமன்றம், மோனிஷாவின் உடலை, அவரது தந்தை தரப்பு மருத்துவர் முன்னிலையில், சென்னை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் வைத்து, மீண்டும் பிரேத பரிசோதனை நடத்த உத்தரவிட்டது.

இதனைத் தொடர்ந்து, விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், பிரேத பரிசோதனைக்குப் பின்னர், பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள மோனிஷாவின் உடல், இன்று காலை சென்னைக்கு கொண்டுவரப்படுகிறது

இதனையொட்டி, போராட்டத்தில் ஈடுபட்ட தனியார் இயற்கை மருத்துவ கல்லூரி மாணவ, மாணவிகள், சென்னை வந்துள்ளனர். இன்று நடைபெறுவதாக கூறப்படும் மோனிஷாவின் இறுதி ஊர்வலத்திற்கு பின்னர், தமிழக அரசை வலியுறுத்திப் போராட்டத்தில் ஈடுபட போவதாக, மாணவ, மாணவிகள் கூறியுள்ளனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top