20 ஓவர் உலகக்கோப்பை: வங்கதேசத்தை 98 ரன்களுக்கு சுருட்டியது மேற்கிந்திய தீவுகள் அணி!

world cup t20‘டுவென்டி-20’ உலக கோப்பையின் சூப்பர்-10 சுற்று ஆட்டத்தில், வெஸ்ட் இண்டீஸ் அணி, 73 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச அணியிடம் வெற்றி பெற்றது.

வங்கதேசத்தில் ஐந்தாவது 20 ஓவர் உலக கோப்பை போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் ‘பிரிவு-2’ல், வெஸ்ட் இண்டீஸ், வங்கதேச அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற வங்கதேச அணி கேப்டன் முஷ்பிகுர், ‘பீல்டிங்’ தேர்வு செய்தார்.

வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஸ்மித் 72, கெய்ல், 48 ரன்கள் எடுத்தனர். சாமுவேல்ஸ் (18) நிலைக்கவில்லை. சிம்மன்ஸ், ரசல், பிராவோ, ராம்தின் என, நால்வரும் ‘டக்’ அவுட்டாக, வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவரில், 7 விக்கெட்டுக்கு 171 ரன்கள் எடுத்தது. சமி (14) அவுட்டாகாமல் இருந்தார்.

இதனைத் தொடர்ந்து, 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் விளையாடிய வங்கதேச அணியால் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியவில்லை. அவ் அணியின் தமிம் இக்பால் (5), முஷ்பிகுர் (22), சபிர் (1), மகமதுல்லா (1) ஆகியோர் பத்ரீயின் சுழல் பந்திற்கு அவுட் ஆகினர். இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்த வங்கதேச அணி 19.1 ஓவரில், 98 ரன்களுக்கு அணைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் மேற்கிந்திய தீவுகள் அணி 73 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top