எங்கள் நாட்டு கடல் பகுதிக்கு வரும் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவார்கள்: இலங்கை அமைச்சர்

mahindaதங்கள் நாட்டுக் கடல் பகுதிக்குள் வந்து மீன் பிடிக்கும் தமிழக மீனவர்களை கைது செய்வதைத் தவிர தங்களுக்கு வேறு வழியில்லை என இலங்கை கடற்தொழில் மற்றும் நீரியல் பாதுகாப்புத் துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இலங்கை கடற்படை ரோந்துக் கப்பல் பணிகளை பார்வையிட்டபின் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தங்களின் பிழைப்பிற்காக மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை நடுக்கடலில் இலங்கை கடற்படை நள்ளிரவில் விரட்டியடிப்பதால், உயிர்பயத்தால் மீன்பிடி சாதனங்களை மீட்டு கரை திரும்புவதால் நாள் ஒன்றுக்க பல கோடிரூபாய் பாதிக்கப்பட்டுவதாக பல வருடங்களாக மீனவர்கள் குற்றம் சுமத்தி வருகின்றனர்

பிழைப்புக்காக பாரம்பரிய கடல்எல்லையில்தான் மீன்பிடிப்பதால் நித்தம் நித்தம் படகுகளை சேதப்படுத்துவது மீன்பிடி சாதனங்களை சேதப்படுத்தி நாசம் செய்வது சமீப காலமாக அதிகரித்துள்ளது எனவே பாரம்பரிய கடல் பகுதியில் இழந்த மீன்பிடி உரிமையை மீட்டுத்தர வேண்டும் என்பதே ஒட்டுமொத்த மீனவத் தொழிலாளர்களினதும் மீனவசங்க பிரதிநிதிகளினதும் கோரிக்கையாக உள்ளது.

இலங்கை கடற்தொழில் மற்றும் நீரியல் பாதுகாப்புத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீரா இலங்கை கடற்படைரோந்துக் கப்பலில் இரவு ரோந்துப்பணியின் போது நேரில் சென்று ஆய்வுசெய்தார் எல்லை தாண்டும் மீனவர்கள் குறித்தும் இதனால் ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள் குறித்தம் இந்திய அரசாங்கத்திற்க்கு ஆதர பூர்வமாக தெரிவித்துள்ளோம். எனத்தெரிவித்தார்.

மேலும் இதே வேளையில் இவ்வாறு தினசரி இலங்கை கடல் பகுதியில் எல்லை தாண்டி சட்டவிரோத மின்பிடிப்பில் ஈடுபட்டுவந்தால் அவர்களை கைது செய்வதை தவிர வேறு வழியில்லை எனவே இனி எல்லைதாண்டி மீன்பிடித்தால் மீனவர்களுக்கு கடும் தண்டனையும் படகுகளை அரசுடமை ஆக்கப்படும் என பிரத்யேகமாக தெரிவித்துள்ளார்


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top