எல்லை தாண்டினால் படகுகளை விடுவிக்காத வகையில் சட்டம்: இலங்கை அரசு மீது தமிழக மீனவர்கள் புகார்!

தமிழக மீனவர்கள்எல்லை தாண்டி தமிழக மீனவர்கள் மீன்பிடிக்க நேரிட்டால், படகுகளை விடுவிக்காத வகையில் சட்டத்திருத்தம் கொண்டுவர இலங்கை அரசு முயற்சித்து வருவதாக ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் புகார் தெரிவித்தனர்.

கடந்த நவம்பர் மாதம் 19ம் தேதி முதல் ஜனவரி 5ம் தேதி வரை, எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக கூறி 106 தமிழக மீனவர்கள் இலங்கை சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில் அவர்களை நல்லெண்ண அடிப்படையில் விடுவிக்க அந்நாட்டு அரசு பரிந்துரை செய்ததை அடுத்து, நீதிமன்றம் அவர்களை விடுவித்து உத்தரவு பிறப்பித்தது.

50 நாட்களுக்கும் மேலான சிறைவாசத்திற்கு பிறகு நேற்றிரவு ஊர் திரும்பிய ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் 45 பேர், மிகுந்த அச்ச உணர்வுடன் காணப்பட்டனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top