தோல்விக்கு நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன்: தோனி

b9cf0585-623f-493f-805d-ee8b1fe9c58f_S_secvpfஇந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 4–வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி கான்பெராவில் இன்று நடைபெற்றது. 3 ஆட்டத்திலும் தோற்று தொடரை இழந்த இந்திய அணி இன்றைய போட்டியில் வெற்றி பெறும் நிலையில் இருந்து போதிலும் பேட்ஸ்மேன்களின் பொறுப்பற்ற ஆட்டத்தால் தோல்வியடைந்தது.

இந்த குறித்து தோனி கூறியதாவது “என்னுடைய விக்கெட்தான் திருப்பு முனையாகிவிட்டது. அணியை இறுதி வரை நின்று வெற்றிக்கு இட்டுச் செல்வதுதான் எனது பணி. எனவே அந்தத் தருணத்தில் நான் அவுட் ஆனது திருப்பு முனையானது. தோல்விக்கு நான் பொறுப்பேற்றுக்கொள்கிறேன்.

எனக்குப் பிறகு இறங்கியவர்களில் சிலர் சர்வதேச கிரிக்கெட் அனுபவம் இல்லாதவர்கள். பெரிய ஷாட்களை ஆடலாம், அப்படி ஆடுவது சரிதான். ஆனால் இன்னும் கொஞ்சம் போட்டிகளில் இவர்கள் ஆடினால், பார்ட்னர்ஷிப்பை உருவாக்குவதன் அவசியத்தை உணர்வார்கள். ரஹானே காயமடைந்ததும் ஒரு முக்கிய காரணமாகிவிட்டது.” என்று தோனி தெரிவித்துள்ளார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top