இந்திய- ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே நாளை 4-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி

ausiஇந்திய-ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையயான நான்காவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நாளை நடைபெறுகிறது. ஆஸ்திரேலியத் தலைநகர் கான்பெர்ரா-வில் நடைபெறும் இந்தப்போட்டி இந்திய நேரப்படி காலை 9 மணியளவில் தொடங்குகிறது.

5 போட்டிகள் கொண்ட தொடரில், முதல் மூன்று போட்டிகளில் வெற்றி பெற்று, ஆஸ்திரேலிய அணி ஏற்கனவே தொடரை கைப்பற்றிவிட்டது. எஞ்சியுள்ள இரண்டு போட்டிகளில் இந்திய அணி ஆறுதல் வெற்றிக்காக போராடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மூன்றாவது ஒருநாள் போட்டியில் விளையாடாத அஷ்வின், ரிஷி தவானுக்கு பதிலாக களமிறக்கப்படுவார் என தெரிகிறது. இதேபோல் வேகப்பந்து வீச்சாளர் பரிந்தர் ஸ்ரன்-னுக்கு பதிலாக புவனேஷ்வர் குமார் விளையாடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மனைவியின் பிரசவத்திற்காக இரண்டாவது மற்றும் மூன்றாவது போட்டியில் விளையாடாத ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் வார்னர், நாளைய போட்டியில் களமிறங்குவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top