நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார் கருணாநிதி: மார்ச் 10-ம் தேதிக்கு வழக்கு ஒத்திவைப்பு!

முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்த அவதூறு வழக்கு விசாரணைக்காக சென்னை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் திமுக தலைவர் கருணாநிதி இன்று ஆஜரானார்.

12548907_1580202105569267_7973923223949589143_n

ஆனந்த விகடன் பத்திரிகையின் கட்டுரையை முரசொலி நாளிதழில் வெளியிட்டு, தி.மு.க. தலைவர் கருணாநிதி கட்டுரை ஒன்றை எழுதினார். இதையடுத்து, முரசொலி பத்திரிகையின் ஆசிரியர் முரசொலி செல்வம், கட்டுரை எழுதிய கருணாநிதி ஆகியோர் மீது, சென்னை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா அவதூறு வழக்கு தொடர்ந்தார். நீதிபதி உத்தரவுப்படி, வழக்கு ஆவணங்களை பெற்றுக் கொள்ள நீதிமன்றத்தில் கருணாநிதி இன்று ஆஜனார்.

இதனையடுத்து வழக்கை வரும் மார்ச் 10ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி ஆதிநாதன் உத்தரவிட்டார்.

வழக்கை விசாரிக்கும் மாவட்ட முதன்மை நீதிமன்றம், உயர் நீதிமன்ற வளாகத்திலேயே இருப்பதால், நீதிமன்ற வளாகம் முழுவதும் பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top