மீண்டும் ஒரு சதம் வீண்: மேக்ஸ்வெல்லின் அதிரடியால் ஆஸ்திரேலியா வெற்றி- தொடரை 3-0 எனக் கைப்பற்றியது

357934c7-7140-4c02-91b3-ae9be34543f5_S_secvpfஇந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3-வது ஒருநாள் போட்டி மெல்போர்னில் இன்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 295 ரன்கள் குவித்தது. விராட் கோலி 117 ரன்களும், ரகானே 50 ரன்களும், தவான் 68 ரன்களும் சேர்த்தனர்.

296 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா களம் இறங்கியது. தொடக்க வீரர்களாக ஷேன் மார்ஷ், ஆரோன் பிஞ்ச் ஆகியோர் களம் இறங்கினார்கள். பிஞ்ச் 21 ரன்கள் எடுத்த நிலையில் உமேஷ் யாதவ் பந்தில் அவுட் ஆனார். அடுத்து கேப்டன் ஸ்மித் களம் இறங்கினார்.

மார்ஷ்- ஸ்மித் ஜோடி நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். ஸ்மித் 41 ரன்கள் எடுத்த நிலையில் ஜடேஜா பந்தில் ஆட்டம் இழந்தார். மார்ஷ் அரைசதம் அடித்து சிறப்பாக விளைாடினார். இருந்தாலும் 62 ரன்கள் எடுத்த நிலையில் இசாந்த் சர்மா பந்தில் ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த பெய்லியை டோனி சிறப்பான வகையில் ஸ்டம்பிங் செய்தார். பெய்லி அவுட்டானபோது ஆட்டம் இந்தியாவிற்கு சாதகமான வகையில் இருந்தது.

ஆனால் அடுத்த வந்த மேக்ஸ்வெல் ஆட்டத்தின் முடிவை மாற்றினார். அவர் சிறப்பாக விளையாடி அணியை வெற்றி பெற வைத்தார். ஆஸ்திரேலியா 49.1 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 296 ரன்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலியா ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-0 எனக்கைப்பற்றி முன்னிலையில் உள்ளது. மேக்ஸ்வெல் 83 பந்தில் 8 பவுண்டரிகள், 3 சிக்சர்களடன் 96 ரன்கள் குவித்து எடுத்து அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார்


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top