3வது ஒரு நாள் போட்டி: ஆஸ்திரேலிய அணிக்கு 296 ரன்கள் வெற்றி இலக்கு

kohli-1ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக மெல்பர்னில் நடைபெற்றுவரும் 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 295 ரன் குவித்தது.

முதல் 2 போட்டிகளிலும் சதம் அடித்த ரோஹித் ஷர்மா இம்முறை 6 ரன்களில் ஆட்டமிழந்தார். ஷிகர் தவானும் அஜிங்க்ய ரஹானேவும் சிறப்பாக ஆடி முறையே 68 ரன்னும் 50 ரன்னும் எடுத்தனர். விராட் கோலி அதிரடியாக ஆடி சதம் அடித்தார். 117 பந்துகளில் 117 ரன் எடுத்து அவர் ஆட்டமிழந்தார்.

ஒருநாள் கிரிக்கெட்டில் அவர் அடித்துள்ள 24வது சதம் இது என்பது குறிப்பிடத்தக்கது. ஆஸ்திரேலிய அணித் தரப்பில் ஹேஸ்டிங்ஸ் அபாரமாக பந்து வீசி 4 விக்கெட்டுகளை சாய்த்தார். இப்போட்டியில் இந்தியா சார்பாக குர்கீரத் சிங், ரிஷி தவான் ஆகியோர் அறிமுகமாகியுள்ளனர். அஸ்வின், மணீஷ் பாண்டே இப்போட்டியில் சேர்க்கப்படவில்லை.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top