கிரிக்கெட் வீரர் மொகமது ஷமியின் தந்தைக்கு மாட்டிறைச்சி தொடர்பாக மிரட்டல்

Captureமாட்டிறைச்சி தொடர்பாக கிரிக்கெட் வீரர் மொகமது ஷமியின் குடும்பத்தினருக்கு மர்ம நபர்களிடமிருந்து மிரட்டல் வருவதாக அவரது தந்தை புகார் அளித்துள்ளார்.

உத்திரப்பிரதேச மாநிலம் அம்ரோவில் இந்திய கிரிக்கெட் வீரர் மொகமது ஷமியின் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

இந்த புகார் குறித்து அம்ரோ மாவட்ட ஆட்சியர் வெட் பிரகாஷ் கூறும்போது, “மொகமது ஷமியின் தந்தை என்னிடம் புகார் அளித்தார். தங்கள் குடும்பத்தினர் தொடர்ந்து தொலைபேசி மிரட்டல்களுக்கு ஆளாவதாக புகார் அளித்தார். யார் மிரட்டினார்கள் என்ற விவரம் அளிக்கவில்லை” என்றார்.

இதற்கிடையே இரண்டு நாட்களுக்கு முன்னதாக, அம்ரோ பகுதியில் மாட்டிறைச்சி வைத்திருப்பதாக தகவல் வந்ததையடுத்து திடோலி போலீஸார் நடவடிக்கை மேற்கொண்டனர். அப்போது இது தொடர்பாக ரிஷ்வான் என்பவரைக் கைது செய்ததை மொகமது ஷமியின் சகோதரர் முகமது ஹாசிப் தடுப்பதற்காக போலீஸாருடன் மோதல் போக்கை கடைபிடித்ததாக கைது செய்யப்பட்டார் என்றும் அவர் மீது வழக்குப் பதிவு செய்து ஜாமீனில் விடுவித்ததாக திடோலி போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரவீண் குமார் தெரிவித்தார்.

ஆனால் தனது மகன் மீது தவறில்லை என்று ஷமியின் தந்தை டாஸீஃப் அகமது மறுத்தார். “எனது மகன் ஹாசிப் சம்பவ இடத்துக்கு வேடிக்கை பார்க்கத்தான் சென்றார், அதுவும் தாமதமாகவே சென்றார்” என்று தெரிவித்தார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top